Wednesday, February 10, 2021

✍🏻🖼️🖼️இயற்கை வாழ்வியல் முறை🖼️🖼️சித்தரத்தை நன்மைகள்.

✍🏻🖼️🖼️இயற்கை வாழ்வியல் முறை🖼️🖼️சித்தரத்தை நன்மைகள்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங்காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

Image result for சித்தரத்தை நன்மைகள்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும். 

Image result for சித்தரத்தை நன்மைகள்.

 🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

ஆஸ்துமா குணப்படுத்த சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம்,  தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து,  தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.

 🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

எலும்புகள் பலம் பெற  நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு,  இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலை தணிக்கும்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

நெஞ்சு சளி பிரச்சனை வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. நெஞ்சு சளி அதிகமாகும் போது அவை நுரையீரல் வரை தொற்றை உண்டாக்கிவிடக்கூடும்.

Image result for சித்தரத்தை gif

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

சிற்றரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். வயதானவர்கள் காலை அல்லது இரவு வேளையில் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் சிற்றாரத்தை பொடி ஒரு டீஸ்பூன் அளவு கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவந்தால் நெஞ்சு சளி கரைத்து மலத்தின் வழியாக வெளியேறும். நுரையீரல் நுண் குழாய்களை விரிவடைய செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சிற்றரத்தை உதவுகிறது. நீண்ட நாளாக கோழைக்கட்டு இருந்தால் சிற்றரத்தை, சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டாலும் பலன் தெரியும்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

பெரியவர்கள் காய்ச்சல், தொடர் இருமல், தீரா தலைவலி போன்றவற்றை கொண்டிருந்தால் சிற்றரத்தை, அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம்தேன் சேர்த்து குடித்துவந்தால் மாற்றம் விரைவில் கிடைக்கும். காய்ச்சல் குறையும். காய்ச்சலுக்கு முதலுதவியாகவே இதை செய்யலாம்

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

பிறந்த குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கும் போது சிற்றரத்தையும் சேர்த்து உரைப்பார்கள். இவை உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியையும் கொடுக்கவல்லது. குழந்தைக்கு சுவாச நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு வலு கொடுக்கும்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

இளைப்பு நோய் இருக்கும் குழந்தைகளுக்கு சிற்றரத்தையை வசம்பு போல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து , நாக்கில் தடவினால் குழந்தைக்கு நிவாரனம் கிடைக்கும். 

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

சிற்றரத்தையில் இருக்கும் வேதிப்பொருள்கள் வாந்தியை கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. உடலில் புற்றுசெல்கள் பரவும் வீரியத்தையும் இவை கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கிறது. முன்னோர்கள் சும்மா எதையும் சொல்லவில்லை, செய்யவும் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை. இனி உங்கள் வீட்டு மருத்துவ அஞ்சறைப்பெட்டியில் இவையும் நிறைந்திருக்கட்டும்.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

(( செல் நம்பர்)) ((7598258480)) (( 6383487768))

🖼️🖼️🖼️🖼️🖼️🖼️

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH :9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...