இலவச பஸ் பாஸ் ! தமிழக அரசு புதிய உத்தரவு !
முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி அன்று, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய சோரகையில் உள்ள அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதற்காக அவருக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும், வாக்களர்களை கவரும் வகையில், விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச பஸ் பாஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment