வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் தமிழ்நாடு அளவில் திருச்சிக்கு 3-வது இடம்: தேசிய அளவில் 10-வது இடம்.
வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டிய லில் மக்கள்தொகை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள நகரங்க ளில் தமிழ்நாடு அளவில் 3-வது இடத்தையும், தேசிய அளவில் 10-வது இடத் தையும் திருச்சி மாநகரம் பெற்றுள்ளது.
நாட்டில் வாழ்வதற்கு ஏற்ற 111 நகரங்கள் மற்றும் 111 சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் குறித்த பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்கள் மற்றும் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவான நகரங்கள் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான 49 நகரங்களும், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள 62 நகரங்களும் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதேபோல, சிறந்த நகராட்சி நிர்வாகத்தில் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான 51 நகராட்சி நிர்வாகங்களும், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவான 60 நகராட்சி நிர்வாகங்களும் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, பொழுது போக்கு, பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டு நிலை, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுச்சூழல், எரிசக்தி பயன்பாடு, பச்சை மண்டலம், கட்டிடங்கள், நகரின் வளர்ச்சி, குடிமக்கள் பார்வை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் தேசிய அளவில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கோவை 7-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்துள்ளன.
மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சிம்லா முதலிடத்தையும், சேலம், வேலூர் ஆகியவை முறையே 5, 6-வது இடங்களையும், திருச்சி 10-வது இடத்தையும், திருநெல்வேலி 17, திருப்பூர் 18, ஈரோடு 24-வது இடங்களையும் பிடித்துள்ளன.
சிறந்த நகராட்சி நிர்வாகம்
கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, துப்புரவு, பதிவு, அனுமதி, உட்கட்டமைப்பு ஆகிய சேவைகள், நிதியில் வருவாய்- செலவின மேலாண்மை, நிதி பரவ லாக்கல், மின்னணு ஆளுமை- பயன்பாடு- மின்னணு குறித்த கல்வியறிவு, திட்டங்கள் தயா ரிப்பு- நடைமுறைப்படுத்துதல்- கட்டாயமாக்குதல், நிர்வாகத்தில் திறன்- வெளிப்படைத்தன்மை- கடமை, மனிதவளம், பங்கேற்பு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் இந்தூர் முதலிடத்தையும், கோவை 12-வது இடத்தையும், சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பெற்றுள்ளன.
மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்களில் சேலம் 5-வது இடத்தையும், திருநெல்வேலி 10-வது இடத்தையும், ஈரோடு 13-வது இடத்தையும், வேலூர் 14-வது இடத்தையும், திருச்சி 17-வது இடத்தையும், தூத்துக்குடி 20-வது இடத்தையும் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிர மணியன் கூறியது: 2018-ம் ஆண்டு தேசிய அளவில் 12-வது இடத்தைப் பெற்றிருந்த திருச்சி, இந்தமுறை 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மாநகர மக்கள் நல்ல ஒத்து ழைப்பு அளிப்பதாலேயே பல்வேறு அம்சங்களில் தேசிய அளவில் திருச்சி சிறப்பிடம் பிடித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் முன்னேற்றம் அடைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
No comments:
Post a Comment