Thursday, March 4, 2021

நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி, தமிழாய்வுத் துறையில் திருவள்ளுவர் சிலை பெறும் நிகழ்வு.

நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி, தமிழாய்வுத் துறையில் திருவள்ளுவர் சிலை பெறும் நிகழ்வு. 


நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி தமிழாய்வுத் துறையில் திருவள்ளுவர் சிலை பெறும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சை மாநகரில் திருக்குறள் மூன்றாவது மாநாடு தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. அம்மாநாட்டை ஒட்டி திருவள்ளுவர் சிலையை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரிக்குக் கொடுப்பதாக அறிவித்து 04-3-2021  வியாழக்கிழமை அன்று கொடுக்கப்பட்டது.  திருவள்ளுவர் சிலை கல்லூரி நூலகத்தின் முகப்பில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரித் தலைவர் உயர்திரு பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் செயலாளர்  உயர்திரு பொன்.இரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர்முனைவர் இரா.பொன்பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம், தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் சி.பிரபாகரன் மற்றும் தமிழாய்வுத் துறை பேராசிரியர்கள், பல்துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர் அல்லா பணியாளர்களும் கலந்துகொண்டு அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி வணங்கி மகிழ்ந்தனர். 


திருவள்ளுவர் சிலை  கல்லூரியில் நிறுவுவதன் நோக்கம் வள்ளுவரின் பெருமையும் உலகப்பொது மறையாம் திருக்குறளின் சிறப்பை  ஆசிரியர்களும் மாணவர்களும் அறிந்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ள திருக்குறள் ஒரு கருவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கருதி அமைக்கப்பட்டது. இந்நிகழ்விற்குக் கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச்செயலாளர் திரு உடையார் கோயில் குணா  அவர்களுக்கும் தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மாணவர்களும் இனி மேல் திருக்குறள் நெறிப்படி வாழ முயற்சிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

      "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

      செய்தொழில் வேற்றுமை யான்".

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். 

ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...