Sunday, April 4, 2021

27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் உயரும்.

 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் உயரும்.

மிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏப்ரல் 6ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

ஏப்ரல் 5ம் தேதி அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். எனவே இந்த நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள், வேட்பாளர்கள், காவல்துறையினர் வெளியில் இருந்து பணிகள் செய்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி மாணவர்.

இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி மாணவர். புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியி ன்  இரண்ட...