Sunday, April 25, 2021

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது - உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது - உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25).

 

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ல் ஏப்ரல் 25ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது. மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

 World Malaria Day 2020: Current Theme, History and Significance

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ்(Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi)  குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.

 On World Malaria Day, 25th April, let's pledge to keep our surrounding  clean and follow the tips to be… | World no tobacco day, World health day,  Preventive measure

வழக்கமாக நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும்போது அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகிறது. நோய்த்தொற்றுடைய கொசு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்தக் கொசு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக் கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் கொசுவின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது.

 World Malaria Day 2021: Finding new approaches to fight malaria

Mosquito GIF - Find on GIFER

இந்த கிருமிகள் இரத்தத்தின் வழியாக ஈரலில் இருக்கும் செல்களுக்குள் நுழைகின்றன. அங்கு அவை பல மடங்காக பெருகுகின்றன. ஈரலில் இருக்கும் செல் வெடிக்கும்போது இந்த கிருமிகள் வெளியே வருகின்றன. இந்த கிருமிகள் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. அங்கு அவை மேலும் பெருகுகின்றன. மலேரியா கிருமி சிவப்பு செல்களுக்குள் நுழைந்து அதை வெடிக்க வைக்கிறது. ஒரு சிவப்பு அணு வெடிக்கும்போது அது கிருமிகளை வெளியிடுகிறது. இந்த கிருமிகள் மேலும் பல சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன.இப்படி இந்த கிருமிகள் பல மடங்காக பெருகுகிறது. ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவருகின்றன.

  Progressive Charlestown: So far, so good

This Dangerous Mosquito Lays Her Armored Eggs – in Your House | KQED

இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன, இரத்த சோகை (தலை லேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு, இன்னும் பல). மற்ற பொது அறிகுறிகளாவன, காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், ஃப்ளூ போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம். கொசு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் கொசு கடிக்காமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் கொசுக்கள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கொசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம். பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தது. கொசுக்களுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக கொசுக்களுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன.

 Mosquito-sucking-blood - deBugged MY

சில தடுப்புமருந்துகள் உருவாக்கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை. நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்புமருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ப்ரோஃபிலாக்டிக் (நோய் வருவதற்கு முன்னதாகவே தடுக்கும் மருந்துப் பொருள்) மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயதுவந்தவர்கள் பலருக்கு நீண்டக் கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (நோய் எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது. சில நாட்கள் கழித்து இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும். இந்த வயந்துவந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய் தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந்தார்களானால் இவர்களுக்கு கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால் நோய் வராமல் தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று பரிந்துரைக்கபடுகிறது.

 Ecard World Malaria Day gif - World Malaria Day Ecard | gifka.com

குயினைன் (quinine) அல்லது ஆர்டிமிஸினின் (artemisinin) மூலம் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் இது போன்ற பல மருந்துகளை எதிர்க்கும் தன்மையுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் அதிகளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...