இந்த குரூப் ரத்த பிரிவு கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் The pan-India serosurvey என்ற பெயரில் கொரோனா வைரஸ் பரவலுக்கான காரணிகள் என்ன, கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தேடும் விதமாக ஆய்வு நடத்தியது. 140 பேர் கொண்ட அறிவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு 10,427 நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் புகைப்பிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சளியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதையும் தாண்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் புகைப்பிடித்தல் மற்றும் நிகோட்டினால் அது எந்தளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் ஆய்வுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஆச்சரியளிக்கும் விதமாக அதில் 1.3 சதவீதம் பேர் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள். இதேபோல ஃபிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடத்திய ஆய்வுகளிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகமாக கொரோனாவால் தாக்கப்படவில்லை என்றே தெரியவந்திருக்கிறது.
உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் பல நோய்களுடன் தொடர்புடை ஒன்று என்பதால், இந்த ஆய்வு முடிவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு அந்தப் பழக்கத்தைத் தொடரக் கூடாது அல்லது புதிதாக ஆரம்பிக்கக் கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல நார்ச்சத்து மிகுந்த சைவ உணவுகளை உண்ணும்போது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. ஆகவே நார்ச்சத்து சைவ உணவு உண்பவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு முடிவும் இதன்மூலம் தெரியவந்திருக்கிறது. O குரூப் ரத்த வகையைக் கொண்டவர்களும் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் B மற்றும் AB குரூப் ரத்த வகையைக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, O ரத்த வகை கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவு என்பது தெரியவந்ததும் கவனிக்கத்தக்கது.
நன்றி.
No comments:
Post a Comment