Monday, April 26, 2021

✍🏻🪶🪶இயற்கை வாழ்வியல் முறை🪶🪶ஜாதிக்காயின் நன்மைகள்.

✍🏻🪶🪶இயற்கை வாழ்வியல் முறை🪶🪶ஜாதிக்காயின் நன்மைகள்.

🪶🪶🪶🪶🪶

பிரியாணி போன்ற சில முக்கிய சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாக்களில் ஒன்று தான் இந்த ஜாதிக்காய். இதை சமையலுக்கு மட்டுமின்றி, உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் மருந்தாக எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

🪶🪶🪶🪶🪶

வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும்.

பெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.

ஜாதிக்காய் குணமாக்கும் நோய்கள் - YouTube

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும்.

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும்.

சாதிக்காயை 10 சுற்றுக்கள் தேனில் உரைத்து, பசையாக்கி, கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண் கருவளையம் மறையும்.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கருமதழும்புகள் மீதும் பூசி வந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்தமருத்துவம்.

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு 1௦ கிராம் எடுத்து, உரலில் போட்டுத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு விரற்கடையளவு எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் விட்டுக் கலக்கிக் குடித்து விட வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, சுவாசகாசம், பெரும்பாடு, பக்கவாதம், தலைவலி, வயிற்றுவலி இவைகளைக் குணப்படுத்தும்.

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய்,  இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.

🪶🪶🪶🪶🪶

பற்கள் பலவீனமாக இருப்பவர்கள், ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த அரு மருந்தாக ஜாதிக்காய் இருக்கும். இதுபோன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் தினமும் பல் துலக்கும் போது டூத் பேஸ்ட்டில் சிறிது ஜாதிக்காய் பொடியைத் தூவி பல் துலக்குங்கள். பல் ஈறுகள் உறுதியாகும். ஈறுகளில் ரத்தம் வடிதல் குறையும். சொத்தைப்பற்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும்

எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும் ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை வைக்க பல் வலி குணமாகும்.

ஜாதிக்காய் மருத்துவமும் அதன் பயன்களும்...!!

🪶🪶🪶🪶🪶

சிறு குழந்தைகலுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படும். அப்போது இந்த ஜாதிக்காய்  தூளை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி குணமாகும். இதை தினந்தோறும் தரக்கூடாது. அதோடு அதிக அளவிலும் குழந்தைகளுக்கு தினமும் தர கூடாது

கர்ப்பிணிப் பெண்கள் ஜாதிக்காய் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிற தாய்மார்களும் ஜாதிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கர்ப்பிணிகள் மட்டுமல்லாதுபொதுவாக யார் ஜாதிக்காய் எடுத்துக் கொண்டாலும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சிட்டிகை அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

🪶🪶🪶🪶🪶

ஜாதிக்காயை அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா கூடாதா என தங்களுடைய குடும்ப மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க... ஆனா இப்படி யூஸ் பண்ணுங்க... |  Nutmeg For Skin: How To Use The Wonder Spice - Tamil BoldSky

🪶🪶🪶🪶🪶

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚

 உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர்  7598258480

வாட்ஸ் அப்  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P.RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...