ஜூன் 28 முதல் எதற்கெல்லாம் அனுமதி-35 அறிவிப்புகள் என்ன?
தளர்வுகள் என்ன?
வகை மூன்றில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள்.
- திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி
பெற்று வாரத்தில் ஒருநாள் பராமரிப்பு பணி செய்யலாம்.
- இனிப்பு, கார வகை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
- பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 முதல் 9 வரை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதி.
- பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்
- அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
- கட்டுமான நிறுவனங்கள் 33% தொழிலாளர்களுடன் செயல்படலாம் என அறிவிப்பு
- இதர தொழிற்சாலைகள் 33% தொழிலாளர்களுடனும், ஐ.டி.சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்படலாம்
- ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம்
- தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
- அரசின் அத்தியாவசிய துறைகள் 100%, இதர துறைகள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்
- வாகன விற்பனை, பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை அனுமதி
- வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் கடைகளும் காலை 9 முதல் இரவு 7 வரை செயல்படலாம்
- பாத்திரக் கடைகள், ஃபேன்சி கடைகள், அழகுசாதன கடைகள் காலை 9 முதல் இரவு 7 வரை அனுமதி
- கட்டுமான பொருட்கள், காலணி கடைகள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்
- சாலையோர உணவகங்களில் காலை 6 முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி
- கணினி, மென்பொருள்கள், மின்னணு சாதனக் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை செயல்படலாம்
- வாகன உதிரிபாகம், செல்பேசி விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை அனுமதி
- கல்விப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை அனுமதி
- ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
- மின் பொருட்கள், கேபிள்கள் விற்கும் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி
வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இதில்
அடங்கும்.
- பாத்திரக்கடைகள், ஃபேன்சி, அழகு சாதனப் பொருள், ஃபோட்டோ, வீடியோ கடைகள் காலை 9 - இரவு 7 மணி வரை செயல்படலாம்
- மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு 50% பயணிகளுடன் அனுமதி
- மாவட்டங்களுக்கு இடையே விதிகளுக்குட்பட்டு 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி
- சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி
- கட்டுமானப் பணிகளை 50% பணியாளர்களுடன் மேற்கொள்ள அரசு அனுமதி
- கணினி, மின்னணு சாதன உதிரிபாக கடைகள் காலை 9 முதல் இரவு 7 வரை செயல்படலாம்
- செல்பேசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்
வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இதில் அடங்கும்.
- திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் 9 வரை நடைபயிற்சி செய்ய அனுமதி
- அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10 முதல் மாலை 5 வரை அனுமதி
- உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஏசி வசதியின்றி 50% நபர்களுடன் செயல்படலாம்
- வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிறுவனங்கள், குறுநிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
- ஐ.டி., ஐ.டி. சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- மின்பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுதுநீக்குவோர், தச்சர் ஆகியோர் வீடுகளுக்கு சென்று பணியாற்ற இ-பதிவின்றி அனுமதி
- தனியார் பாதுகாப்பு சேவை மற்றும் அலுவலகங்கள், வீடுகள் பராமரிப்பு சேவை இ-பதிவின்றி செயல்பட அனுமதி.
- Thanks: Puthiyathalaimurai
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🚆 தெற்கு ரயில்வே வேலை-ஊதியம்: Rs. 20,000/-
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment