Monday, June 28, 2021

✍🏻🎷🎷இயற்கை வாழ்வியல் முறை🎷🎷ஆவாரம் பூவின் நன்மைகள்.

✍🏻🎷🎷இயற்கை வாழ்வியல் முறை🎷🎷ஆவாரம் பூவின்  நன்மைகள்.

🎷🎷🎷🎷🎷 

பெரும்பாலான தாவர வகைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தாவரங்களின் வேர் இலை மரப்பட்டை காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன ஆவாரம் பூ அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும் ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது இந்த ஆவாரம் பூ பற்றிய சில பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்

🎷🎷🎷🎷🎷

ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து அதில் நிழலில் உலர்த்தப்பட்ட ஆவாரம் பூக்களை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார் இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம். நீர் வறட்சி வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.

🎷🎷🎷🎷🎷

கல்லீரல் வயிறு ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும்அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும் ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி கல்லீரல் பலப்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும் கிருமி நாசினி ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போதுஉடலில் ஆறி வரும் புண்கள் காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. மாதவிடாய் சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.

🎷🎷🎷🎷🎷

இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும் அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும் கண்கள் மழைக்காலங்களில் சிலருக்கு கஞ்சைக்டிவிட்டீஸ் சுருக்கமாக கூறினால் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சம்பந்தமான வியாதி ஏற்படுகிறது. இப்பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும்.

🎷🎷🎷🎷🎷

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக்  கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர கருகருவென கூந்தலை பெறலாம் ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

🎷🎷🎷🎷🎷

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள் உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்

 🎷🎷🎷🎷🎷

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள் தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.

 🎷🎷🎷🎷🎷

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்

 🎷🎷🎷🎷🎷

ஆவாரம் பூக்களுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் உடம்பின் பளபளப்பு கூடும் தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து அந்தத் தண்ணீரைக் குடியுங்கள் அதீத தாகத்தை போக்கும் சிறுநீரைப் பெருக்கும் உடல் துர்நாற்றத்தை துரத்தும்

 🎷🎷🎷🎷🎷

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள் சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்

 🎷🎷🎷🎷🎷

ஆவாரம்பூ அதன் பட்டை பனங்கல்கண்டு வால் மிளகு ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர உடம்பு வலுவடையும்சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

🎷🎷🎷🎷🎷

முக அழகு எல்லோருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும் அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும் முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்றை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும்.

🎷🎷🎷🎷🎷

உடல் துர்நாற்றம் கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும் ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும் அதோடு சொறி அரிப்பு போன்றவற்றையும் நீக்கும் காய்ச்சல் பெரும்பாலான காய்ச்சல் வகைகள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும். சிறுநீரக தொற்று பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும் நீரிழிவு ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது தொடர்ந்து இதைப் பயன்படுத்தி   நாமும் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

ஆவாரம் பூ பயன்கள் | ஆவாரம் பூ டீ | ஆவாரம் பூ பொடி

🎷🎷🎷🎷🎷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

2 comments:

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...