முதன்முதலில்
அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் மின்கதிரியக்கப் பிணைப்பைக்
கண்டுபிடித்த, முகமது அப்துஸ் சலாம் பிறந்த தினம் இன்று (ஜனவரி 29, 1926).
முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) ஜனவரி 29, 1926ல், பிரிக்கப்படாத இந்தியாவில் சாஹிவால் மாவட்டத்தில் சாண்டோக்தாஸ் எனும் ஊரில் சவுத்ரி முகமது ஹுசைன் மற்றும் ஹாஜிரா ஹுசைன் தம்பதியருக்கு பிறந்தார். இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை ஆசிரியர்கள், பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச் சொன்னார்கள். இவரோ தனக்குக் கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தைப் பாடமாக தேர்வு செய்தார். தனது 14 வயதில், சலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார். அப்துஸ் சலாம் பல்துறை வல்லுநராகவும் உருது மற்றும் ஆங்கிலப் புலமை பெற்றவராகவும் இருந்தார்.
1994ல் கணிதத்தில் பி.ஏ படித்தார். அவர் ஸ்ரீநிவாஸ ராமானுஜத்தின் கணக்குகளையொட்டிப் பல ஆராய்ச்சிகள் செய்தார். அவர் 1946 ல் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் கணிதவியல் தனது எம்.ஏ. பட்டத்தை பெற்றார். அதே ஆண்டில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ், பி.ஏ. (ஹானர்ஸ்) படிக்க உதவித்தொகை வழங்கியது. 1949ல் அவர் இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். 1950ல் அவர் இயற்பியலில் மிகச் சிறந்த முன் முனைவர் பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்மித் பரிசு பெற்றார். 1951ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வறிக்கையில் முதுநிலை பட்டம் பெற்றார்.
முகமது அப்துஸ் சலாம், ஷெல்டன் கிளாஷோ, ஸ்டீவன் வெய்ன்பெர்க் (Sheldon Glashow, Steven Weinberg) ஆகிய மூவருக்கும் 1979ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. மின்காந்த மற்றும் கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. 1960 முதல் 1974 வரை பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார் சலாம். செப்டம்பர் 16, 1961ல் நிர்வாக ஆணை மூலம், விண்வெளி மற்றும் உயர் வளிமண்டலம் ஆராய்ச்சி ஆணையம் நிறுவப்பட்டது. அதில் அப்துஸ் சலாம் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். 1964ல், அப்துஸ் சலாம் பாக்கிஸ்தான் நாட்டின் IAEA குழு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
1972ஆம் ஆண்டில் ஆயுதங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வையும் சலாம் வழி நடத்தினார். Copley பதக்கம் (1990), ஸ்மித் விருது(Smith), ஆடம்ஸ் விருது(Adams), நிசான் இ இம்தியாஸ் (Nishan-e-Imtiaz) (1979), சித்தரா-இ-பாகிஸ்தான் Sitara-e-Pakistan (1959), இயற்பியலில் சிறந்த பங்களிப்புக்கான தங்க பதக்கம் (அறிவியல் Czechoslovak அகாடமி, பராகுவே) (1981) போன்ற பரிசுகளை பெற்றுள்ளார். 1998ம் ஆண்டில் அந்நாடு அணுப் பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவருக்கு நினைவு தபால் தலைகளை 1998ம் ஆண்டில் வெளியிட்டது. அப்துஸ் சலாம் விருது (சலாம் பரிசு) இயற்பியல் மற்றும் இயற்கை அறிவியல் உயர் சாதனைகள் மற்றும் பங்களிப்புக்கான விருது நிறுவப்பட்டது.
முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் முகமது அப்துஸ் சலாம் நவம்பர் 21, 1996ல் பிராக்ரஸிவ் மிகையணுக்கரு வாதத்தால் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்தில் தனது 70வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பின்னர் அவரது உடல் பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment