ரேசன் கடைகளில் பனை வெல்லம்-பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்-வேளாண் பட்ஜெட்.
தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கியம் அம்சங்கள் இதோ.
- தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75%ஆக உயர்த்த நடவடிக்கை
- இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை
உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது
தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை
சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்
சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி உயர்த்தப்படும்
உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம்
- உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்பு திட்டம்
- வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்
- ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
- கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்
- தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்
- தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
- 2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு
- வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்
- பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
- தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்
- பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்
- 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்
- 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள்
- இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்
- ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்
- முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும்; இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு
- 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு
- கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்
- அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி
- கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2கோடி ஒதுக்கீடு
- இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் ஒன்றிய - மாநில நிதியில்செயல்படுத்தப்படும்
- ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்
- பழப்பயிர் சாகுபடிக்காக ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு
- பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
- அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்
- ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து 100ரூபாயாக உயர்த்தப்படும்
- மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்
- மூலிகை செடிகளை பெருக்கும் திட்டத்திற்கு ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
- 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்
- மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள்
- சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்
- சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத்திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
- 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு
- துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றை 61ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய திட்டம்
- விவசாயத்திற்கான இலவச மின்சார திட்டத்திற்காக மின்வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்
- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்காக ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்
- ரூ.1லட்சம் செலவில் 100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
- நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.39 கோடி ஒதுக்கீடு
- கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்
- கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்
- அரவை பருவத்தில் 1 டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.150 வழங்கப்படும்
- தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை, திருப்பூர் மாவட்டங்கள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்
- 15 மாவட்டங்களில் ரூ.3.5 கோடியில் 28 உலர் களங்கள் அமைக்கப்படும்
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்
- விளைபொருட்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடியில் குளிர்பதன் கிடங்குகள் அமைக்கப்படும்
- உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை, உழவர்விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்
- கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
- கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும்
- ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும்
- பட்ஜெட்டில் வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு ரூ.34,330.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment