Monday, August 2, 2021

✍🏻🏈🏈இயற்கை வாழ்வியல் முறை🏈🏈பேரிச்சம் பழத்தின் நன்மைகள்.

✍🏻🏈🏈இயற்கை வாழ்வியல் முறை🏈🏈பேரிச்சம் பழத்தின் நன்மைகள்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

🏈🏈🏈🏈🏈

எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன

🏈🏈🏈🏈🏈

ஊட்டச்சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும் ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

🏈🏈🏈🏈🏈

ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

🏈🏈🏈🏈🏈

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழம் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

🏈🏈🏈🏈🏈

எடையை அதிகரிக்கும்

ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

🏈🏈🏈🏈🏈

இதில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது அப்பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணிகளின் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும்போது, இதனை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

🏈🏈🏈🏈🏈

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித் தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

🏈🏈🏈🏈🏈

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.

மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்

🏈🏈🏈🏈🏈

(பின்குறிப்பு)          

பேரீச்சம் பழத்தில் அனேக நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் சில நேரங்களில் உடல் எடையை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது

பேரிச்சம் பழம் வாங்கும் போது கவனம் அவசியம். பார்த்த உடனே மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்பதற்காக, மெழுகு போன்ற பொருட்களை தடவி விற்பனை செய்கின்றனர், இப்படிப்பட்ட பேரிச்சம் பழத்தை வாங்கி உட்கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்

நாள்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு

இதேபோன்று கர்ப்பிணி பெண்களும் தரமான பேரிச்சை பழத்தை உட்கொள்வது அவசியம்

ஒருவயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் உகந்தது அல்ல, ஏனெனில் இதன் அதிகப்படியான நார்ச்சத்து குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

🏈🏈🏈🏈🏈

🎴🎴🎴🎴🎴🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...