Thursday, August 12, 2021

✍🏻🌹🌹இயற்கை வாழ்வியல் முறை🌹🌹ரோஜாப்பூவின்நன்மைகள்.

✍🏻🌹🌹இயற்கை வாழ்வியல் முறை🌹🌹ரோஜாப்பூவின்நன்மைகள்.

🌹🌹🌹🌹🌹

ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலகழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து

🌹🌹🌹🌹🌹

இது ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு நம் பல விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை மருத்துவரை ஆலோசித்து வாங்கிக்கொள்கிறோம். ரோஜா பூ ஒரு இயற்கை அளித்த உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுருசுருப்பை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பூ இந்த ரோஜாப்பூ.

🌹🌹🌹🌹🌹

ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை பூ. ஹைப்ரைட் ரோஜாவை பயன்படுத்தாமல் நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா. நம் வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்

🌹🌹🌹🌹🌹

நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும். உடல் சூடு தனிய ரோஜ நீர் ஊரல் பயன்படுகிறது. ரோஜா நீர் ஊரல் என்பது ரோஜா இதழை 6 லிருந்து 8 மணிவரை நீரில் ஊரவைக்கவேண்டும் அப்படி வைக்க ரோஜாவிலிருக்கும் சாறு நீரில் இறங்கிவிடும் இதுவே ரோஜா நீர் ஊரல் என்று அழைக்கப்படுகிறது.

🌹🌹🌹🌹🌹

50 ரோஜா பூ இதழ்களை ½ லிட்டர் வெந்நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு 25 மிலி பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மூன்று வேளையாகக் குடிக்க வெள்ளை படுதல் குணமாகும்.

🌹🌹🌹🌹🌹

10 கிராம் ரோஜா பூவை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்க பித்த நோய் கட்டுப்படும்.

🌹🌹🌹🌹🌹

ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.

புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்

🌹🌹🌹🌹🌹

ரோஜா குல்கந்து

ஒருபங்கு ரோஜா பூ இதழ்களின் எடையோடு, இருபங்கு எடை கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, பசையாக்கி, சிறிதளவு தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைக்க கிடைப்பது ரோஜா குல்கந்து ஆகும்

காலை, மாலை சுண்டைக்காய் அளவு ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

gif love & similar hashtags | Picsart

🌹🌹🌹🌹🌹

ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய  அழகு குறிப்புகளும் தெரிந்து கொள்வோம்.

🌹🌹🌹🌹🌹

சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்

🌹🌹🌹🌹🌹 

முகப்பருக்கள் மறைய அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் வைத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும். இந்த முறையை தினமும் செய்து வரலாம்

🌹🌹🌹🌹🌹

ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இந்த கலவையை உங்கள் உதட்டில் நன்றாக அப்ளை செய்வதினால், உதடு பிங் நிறமாக மாறும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

🌹🌹🌹🌹🌹

சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.

🌹🌹🌹🌹🌹

சருமம் பொலிவுடன் இருக்க, சருமத்தில் உள்ள கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் என்றும் மென்மையாகவும், அழகாகவும் மாற, ஒரு கிளீன் பவுலை எடுத்து, ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ், ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் அழகாக காணப்படும்.

🌹🌹🌹🌹🌹

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...