பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்த, பரிணாமவியலின் தந்தை சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12, 1809).
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) பிப்ரவரி 12,1809ல் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி என்ற ஊரில் ராபர்ட் டார்வினுக்கும், சுசானா டார்வினுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர். 8 வயதிலேயே தாயை இழந்த டார்வின், சுரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறு வயது முதல் விலங்குகள், புழு, பூச்சிகள் மீது அதிக ஆர்வம் காட்டினார். பறவைகளையும் உயிரினங்களையும் கண்காணிப்பது, புத்தங்கள் படிப்பது போன்றவை அவருக்கு பிடித்த செயல்கள். தந்தையின் விருப்பத்தால் முதலில் மருத்துவ படிப்பில் சேர்ந்த டார்வினுக்கு மருத்துவத்தில் ஆர்வமே இல்லை. அதனால் அவரது தந்தை அவர் கிறிஸ்துவ மத பாதிரியார் ஆக வேண்டும் என முடிவு செய்து இறையியல் (Theology) படிப்பதற்காக கேம்பிரிட்ஜ் பலக்லைக்கழகத்தில் சேர்த்தார்.
டிசம்பர் 27, 1331ல் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிடைத்தது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில், ஃபிட்ஸ்ராயோடு தனது 22 வது வயதிலே பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். இது ஐந்து ஆண்டுகள் நீடித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம் ஆகும். அந்தக் கப்பல் உலகையே வலம் வந்தது. ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றில் அரிய வகை உயிரினங்களின் எலும்புகளையும் ஏராளமாகச் சேகரித்தார். தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் சேகரித்தார். உயிரினங்களின் வாழ்க்கையில் இடத்துக்கு இடம் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டார். தான் சேகரித்த எலும்புகளைக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார்.
மாறுதல் (பரிணாம
வளர்ச்சி), மரபு வழி, உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் என்பதே டார்வினின் பரிணாம வளர்ச்சிக்
கோட்பாடு. மரபு
வழி என்பது ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு
எடுத்துச் செல்லும் ஆற்றல் என்பதைக் கண்டறிந்தார். உயிர்
வாழ்தலுக்கான போராட்டத்தில் அனைத்து உயிரினங்களும் ஈடுபடுகின்றன என்று ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவித்தார். உயிரினங்களின்
வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும் என்றும்
மற்றவை அழிந்துபோகும் என்றார். மேலும் இது புதிய இனங்களின் உருவாக்கத்துக்கு
வழிவகுக்கும் என்று கூறினார். மனிதனின் முன்னோர் குரங்குகள் என்பதை
ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.
கேலகாஸ் தீவுகள், ஐரோப்பிய
தீவுகள் என ஐந்து ஆண்டுகள் பயணம் செய்து, சேகரித்த விலங்குகள் மற்றும் பறவைகளின்
எலும்புகளை ஆய்வுசெய்து, ‘The voyage of the Beagle’ என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். 1859ம் ஆண்டில், ‘இயற்கைத் தேர்வு
மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ (The
Origin of Species by Natural Selection) என்ற நூலை
வெளியிட்டார். இவர் மொத்தம் பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.1853ல் ராயல்
பதக்கம், 1859ல் wollaston பதக்கம், 1864ல் கொப்லி
விருது போன்ற விருதுகளை பெற்றார். மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன் போன்ற புதிய
அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்த சார்லஸ் ராபர்ட் டார்வின் ஏப்ரல் 19, 1882ல் தனது 73வது அகவையில் டவுன் கென்ட், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
பிரபஞ்சத்தில்
நாம் அறிந்த கோள்களிலேயே நமது பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான
சூழலைப் பெற்றுள்ளது. இங்கு வியத்தகு எண்ணிக்கையிலான உயிரினங்கள் வாழ்கின்றன. நமது
பூமியில் எங்கு நோக்கினும் நுண்ணுயிரிலிருந்து மிகப்பெரும் விலங்கினங்கள் வரை
ஏதாவது ஓர் உயிரினத்தை காணமுடியும். பூமியில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ள சுமார்
அறுபது இலட்சத்திலிருந்து பத்து கோடி வகையான உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய
தனிச்சிறப்பான உடல்கூறு வடிவமைப்பை பெற்றுள்ளன. இப்படி
தனிச்சிறப்பான உருவ வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்கள் எப்படி, எப்போது தோன்றின? திகைப்பூட்டும்
எண்ணிக்கையிலான இத்தனை வகைகளும்,
தொகுப்புகளும் இருக்க காரணமென்ன?
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் நாள் டார்வின் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகியிலும், அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. டார்வின் முன்வைத்த இயற்கை தேர்வு கோட்பாட்டில் எவ்வித புனித பண்புகளையும் குறிப்பிடவில்லை. உயிர்கள் சூழ்நிலையில் உயிர்த்திருப்பதற்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பண்புகளை, உயிர்கள் அப்பண்புகளை பெறுவதற்கு இயற்கை நிர்பந்திப்பதாகவும் தான் கூறினார்.
மனிதனுடைய சமூக
ரீதியான போராட்டத்தில் இயற்கைத் தேர்வின் பங்கான கூட்டுழைப்புதான் முக்கிய
பங்காற்றியிருக்கிறது. இந்தக் கூட்டுழைப்புதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, தொகுத்து, ஆய்வு செய்து, புதியவற்றை
கண்டுபிடித்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில்
இந்த இயற்கைத் தேர்வு தன்னுணர்வு பெற்று
உணர்வுபூர்வமாக அதை முன்னெடுக்கும் போராட்டத்தினை நடத்துகிறது. இன்றைக்கு
இயற்கைத் தேர்வும் அது சார்ந்த பரிணாமும் மனிதனின் புரிதலுக்குள் வந்து
விட்டபடியால் அதில் மனித அறிவும் இனி வினையாற்றும். அதாவது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்த
செயல்பாடுகளில் மனிதனின் அறிவு பாரிய மாற்றத்தை கொண்டு வரும், வந்திருக்கிறது.
ஒட்டு ரக
விதைகள், குளோனிங், பிராயலர் கோழி, லெக்கான் கோழி, சீமைப் பசு
என்று அதற்கு ஏராளம் சான்றுகளைக் கூறலாம். எதிர்மறையில் இவை உயிரியில்
ஆயுதங்களாகவும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் இருக்கின்றது. அதே நேரம் இப்போதும்
போராட்டத்திற்கான களம் நின்றுவிடவில்லை. மனித சமூகத்தில் இருப்பவனும், இல்லாதவனும்
பிரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் ஏழைகள் அல்லது உழைக்கும்
மக்கள் வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவியல் உண்மையாக மார்க்சியம்
நிறுவியிருக்கிறது. அப்போது டார்வின் விதித்திருந்தபடி இயற்கைத் தேர்வில் தோற்க
இருக்கும் உயிரினங்கள் கூட காக்கப்படும்.
ஒட்டு மொத்த
இயற்கையும் கூட எளிமை எனும் இயக்கத்திலிருந்து சிக்கல் எனும் வளர்ச்சியை நோக்கி
மாறுகிறது. அனிச்சை முயற்சிகள் திட்டமிட்ட முயற்சிகளாக மாறுகின்றன. இறுதியில்
கடவுளை படைத்த மனிதனே இயற்கையின் பாதுகாவலனாக மாறுகிறான். இதற்கு டார்வின் போன்ற
அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை அறிவியல் மட்டும் போதுமானதல்ல. சமூக
அறிவியலான மார்க்சியத்தின் புரட்சிகள் தேவைப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment