Wednesday, August 25, 2021

✍🏻☢️☢️இயற்கை வாழ்வியல் முறை☢️☢️நித்திய கல்யாணி மலரின் பயன்கள்.

✍🏻☢️☢️இயற்கை வாழ்வியல் முறை☢️☢️நித்திய கல்யாணி மலரின் பயன்கள்.


☢️☢️☢️☢️☢️

கட்டுரை: சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்.

☢️☢️☢️☢️☢️

நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3  கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப்  பெற்றது.

☢️☢️☢️☢️☢️

நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு  மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு

நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றதுபாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் தாவரமாக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக  மருத்துவத்தில் பயன்படுபவை

நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ☢️☢️☢️☢️☢️

சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக் கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட வேண்டும்.  அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர  வேண்டும்.

 ☢️☢️☢️☢️☢️

உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை ½ லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும்.  இதைப் போல ஒரு நாளைக்கு 3 வேளைகள் 5 நாள்கள் வரை சாப்பிடலாம்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி இலைச்சாறு இரண்டொரு தேக்கரண்டி எடுத்து வெருகடி மஞ்சள் சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் சர்க்கரை நோய் தணியும். பேதியும் நிற்கும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்திகரித்து மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு தீநீராய்க் காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன் தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி இலைகள் ஐந்துஉடன் வெருகடி அளவு சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரை டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து பாதியைக் காலையிலும், மீதியை இரவு படுக்கப் போகும் முன்னும் சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, நுரையீரல் தொற்று ஆகியன விரைவில் குணமாகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி இலை ஐந்தோடு வெருகடி அளவு சீரகம் சேர்த்து தீநீராக்கிப் போதிய இனிப்பு சேர்த்து பருகி வர ரத்த ஓட்டம் சீர்பெறும். இதனால் மன அழுத்தம், தலைவலி, மயக்கம் ஆகியன குணமாகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி செடியின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து சிறிது சுக்கு, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை அருந்தி வர வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.

☢️☢️☢️☢️☢️

நித்திய கல்யாணி பூவுக்கு இவ்வளவு மகத்துவ, மருத்துவ குணங்கள் உள்ளன என இப்போது தெரிந்து கொண்டோம். இதை ஒவ்வொரு இல்லத்திலும் வைத்திருந்தால் பெரும்பாலும் மருத்துவமனை என்பதே நமக்குத் தேவைப்படாது என்பது திண்ணம்.

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...