Tuesday, August 17, 2021

✍🏻🥀🥀இயற்கை வாழ்வியல் முறை🥀🥀அல்லி மலரின் நன்மைகள்.

✍🏻🥀🥀இயற்கை வாழ்வியல் முறை🥀🥀அல்லி மலரின் நன்மைகள்.

🥀🥀🥀🥀🥀

தாமரை மலர் போலவே அரிய பல நற்பலன்கள் கொண்டது அல்லி மலர்.

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளைக் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழகமெங்கும் குளம், குட்டைகளில் வளர்கின்றனஇலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கிழங்கு குளிர்ச்சி தரும். பூ, தாது வெப்பகற்றும் குருதிக்கசிவைத் தடுக்கும்.

🥀🥀🥀🥀🥀

200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வாலையில் வடித்த நீரை 30 மி.லி யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம் சீல்வருதல் சிருநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகக் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். மாதர் கருவுற்றிருக்கும்போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும். அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம்  ஆகியவை குணமாகும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15  மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப் படபடப்பைத் தணிக்கும்.

 🥀🥀🥀🥀🥀

அல்லி பூ‌   புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

 🥀🥀🥀🥀🥀

கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

 🥀🥀🥀🥀🥀

சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில்  ரத்தம் பெருகும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி மலர்களை உலர்த்தி, நீரிலிட்டு காய்ச்சி, தினமும் பருகிவர, அதிக தாகம், உடல் உள் காய்ச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீற்றுப்புண் பாதிப்புகள் நீங்கும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி மலர்களை  நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி அத்துடன் பனை வெல்லம் சேர்த்து பாகுபதத்தில் பத்திரப்படுத்தி, தினமும் சாப்பிட்டுவர, மூளைச்சூடு குணமாகும். இதயப்படபடப்பு நீங்கி, உடல் மற்றும் கண்கள் குளிர்ச்சியாகும்

🥀🥀🥀🥀🥀

அல்லி மலர்களை செம்பருத்தி மலரின் மடல்களை சேர்த்து நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி பருகிவர, இதயம் தொடர்பான, படபடப்பு, வலி போன்றவை தீர்ந்து, உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

🥀🥀🥀🥀🥀

அல்லி மலர்களையும்  ஆவாரம்பூவையும் சேர்த்து அத்துடன் பனை வெல்லம் கொண்ட நீரில் காய்ச்சி, லேகிய பதத்தில் வந்ததும் சேகரித்து, தினமும் பாலில் கலந்து பருகிவர, சிறுநீர் தொடர்பான வியாதிகள் தீரும்.

கோடை உஷ்ணநேரங்களில், குழந்தைகளுக்கு உடலில் உண்டாகும் சூட்டுக் கட்டிகள் குணமாக, அல்லி இலைகள் மற்றும் அவுரி இலைகள் அவுரி இலைகள் இல்லையெனில் ஆவாரை இலைகளை சேர்த்து அரைத்து கட்டிகளில் பூசிவர, அக்கி உள்ளிட்ட கட்டிகள் உடலில் இருந்து உடைந்துவிடும்.

அல்லி இலைகளில் சாப்பிடுவது அக்காலங்களில் வழக்கமாக இருந்தது

அல்லி இலைகளிட்ட நீரைக் காய்ச்சி, அதன்மூலம் உடலில் உண்டான காயங்களைக் கழுவி வர, அவை விரைவில் ஆறும்.

🥀🥀🥀🥀🥀

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...