Friday, August 13, 2021

✍🏻⏺️⏺️இயற்கை வாழ்வியல் முறை⏺️⏺️கண்டங்கத்திரியின் நன்மைகள்.

✍🏻⏺️⏺️இயற்கை வாழ்வியல் முறை⏺️⏺️கண்டங்கத்திரியின் நன்மைகள்.

⏺️⏺️⏺️⏺️⏺️

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து தசமூலம்  என்பதாகும்.

இது சிறுநீரைப் பெருக்கும் குணமுடையதுவியர்வையை உண்டாக்கும்.

 ⏺️⏺️⏺️⏺️⏺️

கண்டங்கத்திரியின் இலை, காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும். இதன் காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு குழம்பு மற்றும் சாம்பார் செய்து சாப்பிடுகின்றனர். இதனால் உடல் அலுப்பும்,இரும்பலும் சமனமாகி விடுகின்றனர்.

 ⏺️⏺️⏺️⏺️⏺️

ஓயாத இரும்பல் இருக்கும் காலங்களில் கண்டங்கத்திரி வேரை ஒரு ரூபாய் எடையளவு தட்டிப் போட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 6 கிரைன் திப்பிலித் தூளும் சிறிது தேனும் சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டு வர இரும்பல் குறைந்து விடுகின்றது. சாதாரண சுரம் ஏற்படும்போது கண்டங்கத்திரி வேரையும் சுக்கையும் சேர்த்து கஷாயம் வைத்து அருந்தி வருவதால் நல்ல பலன் கிடைக்கும் இதனால் உடல் சோர்வும் தளர்ச்சியும் நீங்கிவிடும்.

 ⏺️⏺️⏺️⏺️⏺️

உடலில் அதிகம் உஷ்ணம் ஏற்படும் போது சில சமயங்களில் சிறுநீர் தாரளமாக இறங்காமல் வலி ஏற்படுவதுண்டு. அந்த சமயங்களில் கண்டங்கத்திரி இலைச் சாற்றோடு தேனை சம்மாய்க் கலந்து (இரண்டும் சேர்ந்து 1/2 அவுன்ஸ்) ஒரு வேளை கொடுக்க நல்ல பலன் அளிக்கும்.சாதாரணமாக ஏற்படும் கை கால் வீக்கங்களுக்குக் கண்டங்கத்திரி விதையை நீரில் அரைத்து பற்றுப் போடுவதன் மூலம் குணமைடைகின்றனர்.

⏺️⏺️⏺️⏺️⏺️ 

கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.

⏺️⏺️⏺️⏺️⏺️

வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல், சளிக்காய்ச்சல்நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.

⏺️⏺️⏺️⏺️⏺️

சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.

⏺️⏺️⏺️⏺️⏺️

பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.

 ⏺⏺⏺⏺⏺

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி,  கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து  சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

 ⏺⏺⏺⏺⏺

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை  சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன்  பழம் சிறந்த மருந்தாகும்.

⏺⏺⏺⏺⏺

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு  பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில்  பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

 ⏺⏺⏺⏺⏺

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு  வேளை கொடுக்கலாம். குணம் கிடைக்கும்.

⏺⏺⏺⏺⏺

கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்.

⏺️⏺️⏺️⏺️⏺️

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு.

அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

⏺⏺⏺⏺⏺

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

⏺️⏺️⏺️⏺️⏺️

பின்குறிப்பு மருத்துவர் ஆலோசனையின்றி இந்த மூலிகையை பயன்படுத்த வேண்டாம்.

⏺⏺⏺⏺⏺

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...