அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).
லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார் போல்ட்ஸ்மேன்.
அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு', 'மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. 'தெர்மோ டைனமிக்ஸ்’ என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு.
பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வெப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்தக் கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களைக் கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே. புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள்மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்துத் தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.
1885 ஆம் ஆண்டில் அவர் இம்பீரியல் ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸில் உறுப்பினரானார். 1887ல் கிராஸ் பல்கலைக்கழகத்தின் தலைவரானார். அவர் 1888 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும், 1899ல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) வெளிநாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான் செப்டம்பர் 05,1906ல் தனது 62வது அகவையில் இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனைப் புரிந்து கொண்டார்கள்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑👌✍️ அரசு தேர்வுகள் பற்றிய முழு விபரங்கள் (TNPSC, TNUSRB, TRB, RRB, TET, SSC).
🛑💳 கொரோனா தடுப்பூசி UNIVERSAL PASS CUM CERTIFICATE எவ்வாறு பெறுவது?
🛑✍️தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (TRB) தேர்வு தேதி வெளியீடு.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment