Thursday, September 2, 2021

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (TRB) தேர்வு தேதி வெளியீடு.

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (TRB) தேர்வு தேதி வெளியீடு.


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு பணிதெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை 2019ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 22.1.2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12.02.2020 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகளில் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...