Thursday, October 28, 2021

அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா.

அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா.


அக்னி 5 (Agni-V) ஏவுகணை ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்தது. நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு  29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.

ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அக்னி-5 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை  ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்தியா நேற்று சோதித்து பார்த்தது.  கடந்த அண்டே இந்த சோதனையை நடத்துவதாக  இருந்தது எனினும் கொரோனா காரணமாக ஏவுகணை சோதனை தள்ளிப்போனது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூன்று பிரிவு திடமான எரிசக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை இலக்கை மிக துல்லியமாக தாக்குதல் திறன் கொண்டது.  கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) அக்னி-5 ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட். இணைந்து உருவாக்கியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை  1.7 மீட்டர் உயரத்தையும் 2 மீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது.

ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்த இந்த ஏவுகணை நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு  29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.  இந்தியா ஏற்கனவே 7 முறை இந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது. அக்னி-V இன் முதல் வெற்றிகரமான சோதனை ஏப்ரல் 19, 2012 அன்று நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15, 2013, ஜனவரி 31, 2015, டிசம்பர் 26, 2016, ஜனவரி 18, 2018, ஜூன் 3, 2018 மற்றும் டிசம்பர் 10, 2018 ஆகிய தேதிகளில் ஏவுகனை சோதனை நடத்தப்பட்டுள்ளது.






இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...