Wednesday, October 27, 2021

5th International Conference on Recent Trends in Applied Science and Technology.

5th International Conference on Recent Trends in Applied Science and Technology.


மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகம்,  இளவேனில் அறிவியல் அமைப்பு, இந்திய அறிவியல்  தொழில்நுட்ப கூட்டமைப்பு (ISTA), இந்திய படிக வளர்ச்சி அமைப்பு (IACG) இணைந்து "பயனுறு அறிவியல்  மற்றும்  தொழில்நுட்பத்தின்  இன்றைய நிலை குறித்த  ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கு   (ICRTAST-2021)  (5th International Conference on Recent Trends in Applied Science and Technology) 2021 ஆம் ஆண்டு,  நவம்பர் 25-28 தேதிகளில் இணையவழியில் நடத்துகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து  கொள்கின்றோம். கருத்தரங்கில் கலந்துகொண்டு  உங்களது ஆய்வுக்   கட்டுரைகளை தமிழில் சமர்ப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

 பன்னாட்டு கருத்தரங்கம்:

பயனுறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அண்மைப் போக்கு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு வருடத்திற்கு ஒரு முறை  வெவ்வேறு  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், இளவேனில் - ISTA அமைப்புகள்  மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. முதல் கருத்தரங்கமானது அண்ணா பல்கலைக்கழகம் சென்னையிலும், இரண்டாவது கருத்தரங்கமானது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும், மூன்றாவது கருத்தரங்கமானது எஸ்.எஸ்.என் கல்வி நிறுவனத்திலும், நான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கு  பாரதிதாசன்  பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. ஐந்தாவது  பன்னாட்டுக் கருத்தரங்கம் 2021ஆம் ஆண்டுநவம்பர் 25-28 தேதிகளில் தேதிகளில் மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகம்  நடத்துகிறது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். கோவிட்-19  தொற்று  காரணமாக  ஐந்தாவது பன்னாட்டு  கருத்தரங்கு  இணையவழியில்  நடக்க உள்ளது. முதல்இரண்டாவதுமூன்றாவது மற்றும் நான்காவது பன்னாட்டு கருத்தரங்கங்கள் பெரும் வெற்றி பெற்றது. மேலும் அதிகமான விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள்தாய்மொழியில் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கத்தின் உள்நோக்கம் பொருட்களின் வளர்ச்சி, பல்வேறு பண்புகள், மீநுண் தொழில் நுட்பம்   உள்ளிட்ட கூறுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சாதகமான கூறுகள் பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை எடுத்துரைப்பதாகும். மாணவர்கள், புகழ்பெற்ற அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் தொடர்பு  கொள்ள இக்கருத்தரங்கு ஒரு சிறந்த தளமாக இருக்கும். இது தொழில் சார்ந்த பயன்பாடுகளை பற்றிய அண்மைக்  கால ஆராய்ச்சியை பகுத்தறிந்து புதிய பாதைகளைத் திறக்கும். மேலும் தொழிலதிபர்களுக்கும், சமூகத்திற்கும் உதவும் வகையில் புதிய விளைப்பொருட்களை கண்டுபிடிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், இக்கருத்தரங்கம் ஒரு நேர்த்தியான வழியைத் திறக்கும். இக்கருத்தரங்கில் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ள சிறப்பு பேச்சாளர்கள் அழைக்கப்பட உள்ளனர். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கட்டுரையினை வாய்வழி மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சி மூலமாக தங்களது பங்களிப்பை வழங்கலாம்.

  ஆய்வுச் சுருக்கம்:

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் நவம்பர் 21, 2021 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் icrtast2021@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு  தங்கள் ஆய்வுச் சுருக்கத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள்  “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி  சஞ்சிகை”- யில் மீளாய்வுக்குப் பின் வெளியிடப்படும். பங்கேற்பாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழ் மொழியில் மட்டுமே விவாதிக்க வேண்டும்.

 குறிப்பு:

ஆய்வுச் சுருக்கங்கள் 'லதா' (Latha) எழுத்துருவில் மட்டுமே இருக்க வேண்டும். நேரடி கூகிள் மொழிபெயர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும்.

 எதிர்நோக்கும் தலைப்புகள்:

 இயற்பியல் துறை மற்றும் வேதியியல் துறை:

படிக வளர்ப்பு, பொறியியல் பயன்பாடுகள், ஒளி வினை வேக மாற்றம், படிகவியல், எரிபொருள் கலகங்கள் மற்றும் பேட்டரி நிலை மாற்றம், பயன்பறிதல் முறை, கிராபின் தொழில் நுட்பம், பல்படி கலவைகள், அரித்தெடுத்தல் நுட்பம், கண்ணாடிகள், மேற்பரப்பு பொறியியல், கலவை பொருட்கள், ஒளிரும் பொருட்கள், உணர்வி & நுண்ணறி பொருட்கள், பீங்கான் பொருட்கள், கருவி தொழில்நுட்பம், மின் கடத்தும் பொருட்கள், மருந்து வடிவமைப்பு, காந்த பொருட்கள், குறைக் கடத்தி பொருள்கள், அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாடு, நிறமாலையியல், சூரிய மின்கலம், ஆற்றல் பொருட்கள் மாதிரி உருவாக்கம், மென்படல தொழில் நுட்பம், பேட்டரி உருவகப்படுத்துதல், ஒளியின் சாதனங்கள், நகர்தல் பண்புகள், நேர் சார்பிலா ஒளியியல், MEMS வடிவமைப்பு, இதர பொறியியல் மற்றும் உயிரி பொருட்கள் தொழில்நுட்பம், ஒளி மின் சாதனங்கள், நானோ தொழில் நுட்பம், மாசு மற்றும் ரசாயன கழிவு சுத்திகரிப்பு.

 

உயிர் அறிவியல் துறை:

தொழில்துறை உயிரிதொழில்நுட்பம், தொற்று நோய்கள் மருந்து கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் உயிரிதொழில்நுட்பம், உணவு உயிரிதொழில்நுட்பம், நானோ உயிரிதொழில்நுட்பம், ஓமிக்ஸ் தொழில்நுட்பங்கள், மருத்துவஉயிரி தொழில்நுட்பம், நுண்ணுயி ர்உயிரிதொழில்நுட்பம், மனித ஆரோக்கிய அறிவியல், மருந்தியல் உயிரிதொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நானோ அறிவியல், நீர்வாழ் அமைப்பு, உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நச்சுயியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு மற்றும் தணித்தல், பருவநிலை மாற்றம், உயிரியல் ஆய்வு, சிகிச்சை மூலக்கூறுகள், செனோபயோடிக்ஸ் உயிரியல்.

  

இணையவழி பதிவு: பதிவு கட்டணம் இல்லை

 http://icrtast.rf.gd/

 முக்கிய தேதிகள்:

 ஆய்வுச் சுருக்கம் அனுப்ப கடைசி தேதி: 21.11.2021

 ஆய்வுச் சுருக்கம்  ஏற்றுக்கொள்ளும் அறிவிப்பு: 22.11.2021

 இணையவழி பதிவு செய்ய கடைசி தேதி: 24.11.2021

 பரிசுகள்:

 1. சிறந்த வாய்வழி மற்றும் சுவரொட்டிக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

 2. “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி  இதழின்தரத்தை  உயர்த்த அவ்விதழில் இதுவரை  வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளை பற்றிய குழு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு  விவாதத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள்  விருப்பத்தையும் அதற்கான  கட்டுரையினையும்  அனுப்பலாம். குழு விவாதத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Tamil Brochure - ICRTAST 2021 Link


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...