Saturday, October 16, 2021

நான்காவது முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே-உங்களை விட்டு போகமாட்டேன், கண்கலங்கிய, தோனி.

நான்காவது முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே-உங்களை விட்டு போகமாட்டேன், கண்கலங்கிய, தோனி.

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியனாகி உள்ளது சென்னை. 


கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இருப்பினும் அவர்களை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். அதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் இழந்தனர். 


20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. தாக்கூர், ஜடேஜா, ஹேசல்வுட், பிராவோ, தீபக் சாஹர் என சென்னை அணியின் பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். 

ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 



எடுத்த சபதம் முடித்த தோனி - தல தல தான்



தாய் அன்பை மிஞ்சிட்டீங்க, உங்களை விட்டு போகமாட்டேன், கண்கலங்கிய, தோனி பேட்டி



இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள். புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில்  பயிலும்  161  மாணவர்கள்,  இஸ்ரோ ஆல் நட...