✍🏻🟤🟤இயற்கை வாழ்வியல் முறை🟤🟤தேற்றாங்கொட்டையின் நன்மைகள்.
🟤🟤🟤🟤🟤
தேற்றான்கொட்டை இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். Strychnos Potatorum என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்த மரம் நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
🟤🟤🟤🟤🟤
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்) தென்கயிலை திருக்கோளிலி புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன அவற்றில் இல்லம் சில்லம் கதலிகம் என்பது போன்ற பல பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தேறு தேத்தாங்கொட்டை என்ற பெயர்களும் உள்ளன.
🟤🟤🟤🟤🟤
கலித்தொகையிலும் நற்றிணையிலும்கூட இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள் என்பது கலித்தொகை பாடல் வரியாகும் தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள் என்பது அந்த பாடல்வரியின் பொருள்.
🟤🟤🟤🟤🟤
தேற்றான் மரம் பளபளப்பாகவும் கரும்பச்சை நிற இலைகளையும் உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம் தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது தேற்றான் மரத்தின் பழம் விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன
🟤🟤🟤🟤🟤
பொதுவாக முற்காலங்களில் நம் முன்னோர் தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளியவைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் குளம் ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால் தேற்றான்கொட்டையால் நீரைத் தெளியவைத்து பயன்படுத்தினர். இன்றைக்கும்கூட இது, சில கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. தஞ்சாவூர் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரைத் தெளியவைக்க, அதாவது கலங்கிய நீர் நிரப்பப்பட்ட பானையின் உட்புறம் தேற்றான்கொட்டையை தேய்த்துவைப்பார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும். அழுக்குகள் மற்றும் கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீர் கிடைக்கும் இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது
🟤🟤🟤🟤🟤
அமலக்கா (நெல்லி), நாகா (நன்னாரி), உசிரா (வெட்டி வேர்), முஸ்டா (கோரைக்கிழங்கு) கோசடக்கா (நுரைபீர்க்கை), அஞ்சனா (காட்டு ஏலக்காய்) போன்றவற்றைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் தேற்றான்கொட்டைத் தூளைச் சேர்த்து, கிணற்று நீர் அல்லது கலங்கிய நீரில் கலந்தால் கசப்பாக இருந்தாலும், சப்பென்று இருந்தாலும் உப்பாக, ருசியில்லாமல் நாற்றமடிக்கக்கூடியதாக இருந்தாலும் அவற்றைத் தெளியவைத்துவிடும். அந்த நீரைக் குடித்தால் சுத்தமாகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
🟤🟤🟤🟤🟤
இது மட்டுமல்ல ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான்கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது, அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை அந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது இந்தச் சக்கை நீரோடு கலக்கும்போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.
🟤🟤🟤🟤🟤
சங்க காலத்தில் தேற்றான் மரத்தின் பூக்களோடு கஞ்சன்குல்லை, கூதாளி குவளை மலைமல்லி ஆகிய மலர்களையும் சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிந்து மகிழ்ந்திருக்கிறார்களாம். அதுதான் குல்லை கலவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த எந்தன் கண்ணியன்' என்று நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🟤🟤🟤🟤🟤
தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
🟤🟤🟤🟤🟤
தேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள் திரிபலாத் தூள், சீரகத் தூள் சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும் அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம் ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும் இது அல்வா பதத்துக்கு வந்ததும் நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும் நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தேன் சேர்த்துக் கலக்க வேண்டும் இந்த லேகியத்தை காலை மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும்.
🟤🟤🟤🟤🟤
இதனை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம் இதன் பொடியை மஞ்சளுடன் சேர்த்தரைத்து கட்டிகள் மீது பூசி வரகட்டிகள் பழுத்து உடையும்
🟤🟤🟤🟤🟤
தேற்றான் கொட்டை லேகியம்
150கிராம்சுக்கு 20 கிராம் மிளகு 20 கிராம் திப்பிலி - 20 கிராம் கடுக்காய் - 20கிராம் நெல்லிக்காய் -20கிராம் தான்றிக்காய் - 20கிராம் சித்தரத்தை 20கிராம் சீரகம்-20கிராம்
இந்த அளவில் சேகரித்து தேத்தான் கொட்டையை வறுத்து அத்துடன் மேற்கண்டவற்றை பொடி செய்து சலித்து ஒன்றாக்கவும். சர்க்கரை 200 கிராம் எடுத்து 2 லிட்டர் பசுவின் பாலில் கரைத்து காய்ச்சவும். காய்ச்சும் போதே மேற்கண்ட சூரணத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும் லேகியபதம் வரும் போது பசுநெய் 500 கிராம் தேன் 200 கிராம் சேர்த்து ஆறவிடவும் அதன்பின் அதனை தான்யபுடம் 3 நாள் வைத்து எடுத்து தினம், காலை மாலை, இருவேளை நெல்லிக்காய் அளவு எடுத்து சாக்லெட் போல் சுவைத்து சாப்பிடவும்.
🟤🟤🟤🟤🟤
இதனால் மூலம் பௌத்திரம் உடல் இளைப்பு வெள்ளை வெட்டை வாய்வு எலும்பைப் பற்றிய காய்ச்சல் பசியின்மை நீங்கும். நாகபற்பம் சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும்
🟤🟤🟤🟤🟤
எவ்வளவு சாப்பிட்டஎவ்வளவு சாப்பிட்டாலும் சதைப்பிடிப்பு இன்றி மெலிதாக இருப்பவர்கள் இதனை 3 மாதம் சாப்பிட உடம்பு நன்கு தேறும் இதன் காரணமாகத்தான். இதனை சித்தர்கள் தேற்றான் கொட்டை என்று குறிப்பிட்டனர்.
🟤🟤🟤🟤🟤
எல்லோர் வீட்டிலும் நெல்லிக்காய் அமுதமும் தேற்றான் கொட்டை அமுதமும் இருந்தால் ஆயுள், ஆரோக்கியம் தீர்க்கமாக இருக்கும்.
🟤🟤🟤🟤🟤
சிறுநீர் அடிக்கடி போகும் பிரச்சனை இருப்பவர்களுக்கு பசும்பாலை காய்ச்சி வெந்நீரில் கொதிக்க வைத்த இந்த தூளை அரைடீஸ்பூன் அளவு கலந்து கொடுத்தால் படிப்படியாக குணமாகும். நீர்ச்சுளுக்கு பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கும் சிறுநீரகக் கோளாறுகளையும் குணமாக்கும்🟤🟤🟤🟤🟤
கண் வீக்கம் கண் நோய்க்கும் இந்த பற்று பலன் அளிக்கும் காயங்கள் புண்களின் மீதும் இந்த பற்று பலனளிக்கும்இவை தவிர சீதபேதி ஆகும் போது தேற்றான் கொட்டை பொடியை நீரில் கலந்து குடித்துவரலாம்
🟤🟤🟤🟤🟤
பாரம்பரியமான வைத்தியத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு மேற்கண்ட குறிப்புகள் முன்னோர்கள் கடைபிடித்து வந்தவை. இதை நீங்கள் முயற்சிக்கும் பொது உங்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.
🟤🟤🟤🟤🟤
கட்டுரை: நமச்சிவாயம்
🟤🟤🟤🟤🟤
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🍩🍩🍩🍩🍩
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🦚🦚🦚🦚🦚
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
🍩🍩🍩🍩🍩
(( செல் நம்பர்)) ((7598258480)) ((6383487768))
🍩🍩🍩🍩🍩
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH : 9750895059.
No comments:
Post a Comment