Thursday, December 16, 2021

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் டிசம்பர் 15, 16 ஆகிய இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி சிறப்பாக  நடைபெறுகிறது. கைபேசியில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்ய நியூ டெக்னாலஜி, கோயம்புத்தூர் இருந்து நம் கல்லூரிக்கு வந்து பயிற்சி அளித்தார்கள். அதில் கைபேசியில் உள்ள மின்தடை, மின்தேக்கி, மின்கம்பிச்ச்சுருள், டிரான்சிஸ்டர், டையோடு, ஆகியவை பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாகவும், எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டது. மேலும் செய்முறை பயிற்சியில் கைபேசியை எவ்வாறு திறப்பது, அதில் உள்ள மைக், ரிங்கர், மற்றும் ஸ்பீக்கர், பற்றி ஆதன் மதிப்புகளையும், அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் மிகவும் தெளிவாக கூறினார்கள். டிஸ்ப்ளே எவ்வாறு  மாற்றுவது, அதில் எற்படும்  பழுதுகளை எவ்வாறு சரி செய்வது  என்பதை பற்றியும்  கூறினார்கள். 



ஒருங்கிணைந்த மின்சுற்று (IC) எவ்வாறு பிரித்தெடுப்பது மேலும் மதர்போர்டு (mother board) எற்படும் பழுதுகளை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றியும் கூறினார்கள் மேலும் கைபேசியை பிளஷிங் (flashing) செய்வது  பற்றி தெளிவாக கூறப்பட்டது. மேலும் அனைத்து கைபேசிகளில் ஏற்படும்   பழுதுகளை எவ்வாது சரிசெய்வது என்றும், கைபேசியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏர்படுத்தினார்கள். பேட்டரி எவ்வாறு பழுது ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரிசெய்வது பற்றியும் கூறினார்கள். குறிப்பாக கைபேசியை புதிதாக வாங்கும்போது வரும் சார்ஜரை மட்டுமே கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும் என்பதையும், இதனால் கைபேசியில் கைபேசியில் உள்ள பேட்டரி ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்பதையும் கூறினார்கள். அதெபோல் இரவு முழுவதும் சார்ஜ் போட்டால் பேட்டரி விரைவில் செயழிந்து விடும் என்ற கருத்தையும் கூறினார்.  எவ்வாறு புதிதாக மொபைல் சேல்ஸ், சர்வீஸ் சென்டர் வைப்பது என்பது பற்றியும் கூறினார்கள். 



இந்த பயிற்சியில் எழுபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி பெற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் நோக்கம் படிக்கிற போது மாணவ மாணவிகள் பணம் சம்பாரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். மேலும் மாணவ மாணவிகள் திறமையை வெளிக்கொணர்ந்து, மாணவர்களும் பயன்பெற்று, எதிர்வரும் காலத்தில் அரசு வேலையை மட்டும் எதிர்நோக்கி இல்லாமல், சுயதொழில் செய்து, மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கும் வகையில் வகையில் இப்பயிற்சி அமையும்.  ஒரு காலகட்டத்தில் இது போன்ற பயற்சியின் மூலம் சுய தொழில் செய்து அவர்கள் பெரிய அளவிலான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக நேரு நினைவு கல்லூரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

முன்னதாக துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் .ரா. பொன்.பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் பயிற்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.






































இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும். செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திரன் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நி...