Friday, December 31, 2021

✍🏻⛵⛵இயற்கை வாழ்வியல் முறை⛵⛵மலச்சிக்கல் காரணமும் தீர்வும்.

✍🏻⛵⛵இயற்கை வாழ்வியல் முறை⛵⛵மலச்சிக்கல் காரணமும் தீர்வும்.


⛵⛵⛵⛵⛵

காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை. 

⛵⛵⛵⛵⛵

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, நோய் அணுகா விதி’ மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது

⛵⛵⛵⛵⛵

முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும் 

தலைவலி மிக உண்டாகும் 

சத்தமானபான வாயு பெலமது குறையும் 

வந்து பெருத்திடும் வியாதிதானே என்கிறது 

மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.


இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள். 

⛵⛵⛵⛵⛵

வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. இப்படி, `அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது. 

⛵⛵⛵⛵⛵

அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். 

⛵⛵⛵⛵⛵

சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ... அதனாலதான் மலச்சிக்கலோ...’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், `டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது. 

⛵⛵⛵⛵⛵

பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத 'அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது. 

⛵⛵⛵⛵⛵

பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம். 

⛵⛵⛵⛵⛵

நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது. 


⛵⛵⛵⛵⛵

மலச்சிக்கலுக்கான தீர்வுகள்.

⛵⛵⛵⛵⛵

3 தேகரண்டி  விளக்கெண்ணெய்.எண்ணையுடன்,சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

  கரிசாலை இலை5, தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

 நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵ 

மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵ 

கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து, பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵ 

சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து, பொடித்து, 2சிட்டிகை, சமன் மஞ்சள் தூளுடன், 50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்.

 ⛵⛵⛵⛵⛵ 

தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்.

 ⛵⛵⛵⛵⛵ 

முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்.

⛵⛵⛵⛵⛵

வில்வ இலைத்தூள் அரைதேகரண்டி,வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண்,மலச்சிக்கல் குணமாகும்.

 ⛵⛵⛵⛵⛵ ரோஜாகுல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும்.தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்

⛵⛵⛵⛵⛵

 பாகல்இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்

 ⛵⛵⛵⛵⛵ ஆடுதீண்டாப்பாளை இலை அல்லது விதைச்சூரணம் அரைதேகரண்டி, வெந்நீர் அல்லது விளக்கெண்ணெய் எண்ணையில் கொள்ள பேதியாகி மலக்கட்டு உடையும்

 ⛵⛵⛵⛵⛵ 

காக்கரட்டான்வேர் 10 கிராம்,சுக்கு15கிராம்,திப்பிலி10கிராம்,விளாம்பிசின் 10 கிராம் சேர்த்தரைத்து,குன்றிமணியளவு மாத்திரை செய்து.பெரியவர்களுக்கு1, குழந்தைகளுக்கு அரைமாத்திரை வீதம் காலை வெந்நீரில் கொடுக்க பேதியாகும்

⛵⛵⛵⛵⛵

 நல்வேளை விதைகளை நெய்யில் வறுத்துப் பொடித்து,குழந்தைகளுக்கு அரை, பெரியவர்களுக்கு 4 கிராம் என்ற அளவில் தினமிருவேளை,3நாள் கொடுத்து, 4ம் நாள் காலை வி.எண்ணை அரைதேகரண்டி கொடுக்க பேதியாகும். தட்டைப் புழுக்கள் வெளியாகும்

⛵⛵⛵⛵⛵

  10கிராம் நுணாவேரை 5ல்1ன்றாய்க் காய்ச்சி 100மிலி பருக பேதியாகும்

கால் சங்கு நீரில், 5துளிதேன்,கோரோசனை மாத்திரை1, கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க  மலச்சிக்கல்  தீரும்

⛵⛵⛵⛵⛵ 

மூலக்குடோரி எண்ணை 10-15மிலி வெதுவெதுப்பான பாலில் இரவில் கொள்ள மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵ 

கடுக்காய்தோல் 5கிராம்,3ல்1ன்றாய்க் காய்ச்சி தினம்3வேளை பருக மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵

 10கிராம் உலர்ந்த திராட்சையை 100மிலி வெந்நீரிலூறவைத்துப்,பிசைந்து 15-30 மிலி, இரவில் குழந்தைகளுக்குக் கொடுக்க மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵

 மூக்கிரட்டை இலையை பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். கண் பார்வை தெளிவடையும் .உடல் வனப்பாகும்

⛵⛵⛵⛵⛵ 

சிவதைவேரைப் பாலில் வேகவைத்து,பொடித்து,1கிராம்,இரவு வெந்நீரில் கொள்ள வயிற்று வலியின்றி மலம் வெளியாகும் 

⛵⛵⛵⛵⛵ 

திராட்சைகொட்டை நீக்கி,சாறெடுத்து 10மிலியுடன்,தேன் கலந்து சாப்பிட்டுவர இரத்தம் சுத்தமாகும் .மலக்கட்டு தீரும்

⛵⛵⛵⛵⛵ 

பால்பெருக்கி இலையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்

 ⛵⛵⛵⛵⛵ 

கொய்யாப்பழத்தை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்

⛵⛵⛵⛵⛵

நிலவாகை சூரணம்  5-10கிராம் இரவில் வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும். 

⛵⛵⛵⛵⛵

ஆவாரை பஞ்சாங்கசூரணம் 1தேகரண்டி,வெந்நீரில் கொள்ள அதிதாகம், நாவறட்சி உஷ்ணம்,அதிமூத்திரம்,மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵ 

வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய்.எண்ணை தடவி ஆசனவாயில் வைக்க மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

சுக்கு வெந்நீரில் 1,2 தேகரண்டி வி.எண்ணை கலந்து பருக மலச்சிக்கல் தீரும்.

 துத்தியிலை,சிறுபயறு,வெங்காயம் சமனாய் எடுத்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

 ⛵⛵⛵⛵⛵ 

பீட்ரூட்பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல்,இரத்தசோகை தீரும்.

 ⛵⛵⛵⛵⛵ 

வேப்பம்பட்டைச்சூரணம் 10கிராம் பாலில் கொள்ள மூலம்,மலக்கட்டு,குன்மவலி நீங்கும்

⛵⛵⛵⛵⛵ 

சரக்கொன்றைபூவை வதக்கித் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும் 

 ⛵⛵⛵⛵⛵ 

சரக்கொன்றைப் புளியை சமையல் புளியுடன் கலந்து உணவில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵ 

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தர கக்குவான் இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

 செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

  தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.

 அரை மூடி எலுமிச்சைப் பழச் சாற்றை, வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பை நன்றாக கலந்து காலை எழுந்தவுடன் குடிக்க மலச்சிக்கல் தீரும். 

⛵⛵⛵⛵⛵

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு நெய் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட மலக்கட்டு தீரும்.

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி தினமும் 2 தேகரண்டி  சாப்பிட மலச்சிக்கல் குணமடையும்.

விளக்கெண்ணெயை தினமும் ஆசன வாயில் தடவ மலச்சிக்கல் தீரும்.

⛵⛵⛵⛵⛵

ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை பத்து கிராம் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

தினமும் அரை தம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு பொடித்து ஒருதேகரண்டி தேனில் குழைத்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.

பிஞ்சு கடுக்காய் 100 கிராம், சுக்கு100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்கும் பொழுது குடித்து விட்டு படுக்க மலம் இளகும்.

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். 

ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும் . 

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மலக்கட்டு உடையும்.

⛵⛵⛵⛵⛵

நார் சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

உணவு சார்ந்த விஷயங்களை சரியான முறையில் பின்பற்றினால் மலச்சிக்கலை தவிர்த்து விடலாம் இரவில் அசைவ உணவைத் தவிர்த்து விடுவது சாலச் சிறந்தது.

⛵⛵⛵⛵⛵

கட்டுரை நமச்சிவாயம்.

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...