மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முப்பெரும் போட்டிகள்.
அன்புடையீர்! மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத் துறையில் 17-12-2021 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் முப்பெரும் (பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி)கலைப் போட்டிகள் நடைபெற இருக்கின்றது. ஆகையால் அனைத்துத் துறை இளங்கலை.இளம் அறிவியல் மற்றும் முதுகலை முதுநிலை அறிவியல் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்த நினைக்கும் மாணவர்கள் தங்களுடைய பெயரினை தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள்
1. முனைவர் ரெ. மலர்விழி
2. முனைவர் செ.மணிகண்டன்
அவர்களிடம் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு:
பேச்சுப்போட்டி
1. இனி ஒரு விதி செய்வோம்
2. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
கட்டுரைப் போட்டி
1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவி பாரதி
2. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
கவிதைப்போட்டி
1. பெண்ணே எழுந்து வா
2.நிமிர்ந்து நில்
குறிப்பு:
கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வீட்டிலேயே எழுதிக்கொண்டு வரவேண்டும். கட்டுரை ஏ 4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கவிதை புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதையாகவோ இருக்கலாம்.
கவிதை 20 வரிகளுக்குள்இருக்க வேண்டும்.
கவிதையும் கட்டுரையும் சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.
பேச்சுப்போட்டி மட்டும் குளிர்மை அரங்கத்தில் காலை சரியாக பத்து மணிக்கு நடைபெறும்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
நடுவர்:
முனைவர் இரா .பத்மாவதி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
தேசியக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
வாழ்க தமிழ் !வெல்க தமிழ்!
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment