✍🏻🔲🔲இயற்கை வாழ்வியல் முறை🔲🔲வேங்கை மரத்தின் நன்மைகள்.
🔲🔲🔲🔲🔲
வேங்கை மருத்துவ குணம் வாய்ந்த மரமும்கூட. தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது இந்த வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். வேங்கை மரம் பற்றி அமையப்பெற்றுள்ள தேவாரப் பாடல் ஒன்று வேங்கை மரம் எவ்வளவு தொன்மைவாய்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறது. உலகில் இன்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள சர்க்கரை நோய்க்கு வேங்கை மரப்பட்டை நல்ல மருந்து என கண்டறியப்பட்டுள்ளது. தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதிலும் வேங்கை மரப்பட்டை நன்கு செயல்புரிகிறது. வேங்கை மரம் சுற்றுச்சூழலில் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பேருதவி புரிகிறது. கொழுத்தும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ குணத்தை இயற்கை இந்த மரத்திற்கு அளித்துள்ளது.
🔲🔲🔲🔲🔲
வேங்கை மரத்தைக் கீறினால் பால் வரும், அந்தப் பாலை தொட்டு நெற்றிப்பொட்டாக இட்டுக்கொள்ளுவார்கள், சற்று உலர்ந்ததும் அந்த பொட்டு, கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும் இந்த பொட்டை இட்டுக்கொண்டால் பேய்,பிசாசுகள் அனுகாது என்பது மக்களின் நம்பிக்கை.
🔲🔲🔲🔲🔲
வேங்கை, மருது, வேம்பு, ஆவாரை, சந்தனம் ஆகிய மரங்களின் பட்டையுடன், தாமரை,செம்பருத்தி,மகிழம்பூ ஆகிய பூக்களையும், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பாசிப்பயறு,கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து பொடியாக்கி உடலுக்குத்தேய்த்துக் குளித்தால் மாசற்ற,ஒளிரும் சருமம் கிடைக்கும்.
🔲🔲🔲🔲🔲
இதன் பட்டையை அரைத்துக் குடித்தால் வயிற்றுப் போக்கு குணப்படும்.சர்க்கரை நோய் கட்டுப்படும். இதன் பட்டையுடன்,சீரகம்,சோம்பு,மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவ சொறி, சிரங்கு, படை விலகும்.
🔲🔲🔲🔲🔲
தொற்று நோய்களுக்கும் மகத்தான தீர்வாக இருக்கிறது வேங்கை மரம். எனவே, ஊருக்கு பத்து வேங்கை மரங்களாவது வளர்க்க வேண்டும். வேங்கைப் பட்டையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால், இதன் பட்டைக் கஷாயம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்பு சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்தும். இரும்புச் சத்தை அதிகரிக்கப் பயன்படுத்தும் மருந்துகளிலும் இந்தப் பட்டையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்
🔲🔲🔲🔲🔲
தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் வேங்கை மரப்பட்டையின் வீரியம் அதிகம். வேங்கைப் பட்டை, சீரகம், சோம்பு, மஞ்சள் கலந்து கொதிக்கவைத்த கஷாயத்தை ஒரு மாதத்துக்கு
தினமும் அரை டம்ளர் என்ற அளவில் குடித்துவந்தால், தேமல், கருந்தேமல், படை, சொறி, படர்தாமரை, கட்டி போன்ற சரும நோய்களும் குணமாகும். வேங்கைப் பட்டை, மருதம் பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், ஆவாரம் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ, கடுக்காய் பூ, மகிழம்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், பச்சைப் பயறு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் கலந்து அரைத்து பொடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமையால் உண்டாகக் கூடிய சருமத் தடிப்புகளுக்கும் வேங்கைப் பட்டைக் கஷாயம் நல்ல மருந்து.
🔲🔲🔲🔲🔲
உடல் முழுவதும் கொழுப்புக் கட்டிகள் உருவாகி அவஸ்தைப்படுபவர்களுக்கு நவீன மருத்துவ முறைப்படி அறுவைச் சிகிச்சைதான் தீர்வாக இருக்கும். ஆனால், உடல் முழுக்க உருவாகி இருக்கும் இந்தக் கட்டிகளுக்கு எத்தனை இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இதற்கு சிறந்த தீர்வு வேங்கை மரத்தின் இலையும், பூவும். வேங்கை இலை, வேங்கைப் பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் தேவையான அளவு எடுத்து, வெந்நீரில் கரைத்து, உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்வேங்கைப் பட்டையைத் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகப் பருகினால், சீதபேதி, உஷ்ணபேதி போன்றவை உடனே குணமாகும்''
🔲🔲🔲🔲🔲
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment