Wednesday, January 26, 2022

✍🏻⚫⚫இயற்கை வாழ்வியல் முறை⚫⚫கருங்காலி மரத்தின் பயன்கள்.

✍🏻⚫⚫இயற்கை வாழ்வியல் முறை⚫⚫கருங்காலி மரத்தின் பயன்கள்.

⚫⚫⚫⚫⚫

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்களை உங்களிடம் இன்று சித்தர்களின் ஆசியின் வாயிலாக இன்று விரிவாக பகிர்கிறேன்.

⚫⚫⚫⚫⚫

கருங்காலி மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

⚫⚫⚫⚫⚫

இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும்.  அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம்.

⚫⚫⚫⚫⚫

இந்த மரத்திற்கு negative_energy அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.

⚫⚫⚫⚫⚫

இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி உண்டு. அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள்  கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க, தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யப்படவேண்டும்.

⚫⚫⚫⚫⚫

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள். 

(1) காற்று, கருப்பு அண்டாமல் இருக்க,

(2) குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க

⚫⚫⚫⚫⚫

சிலருக்கு பக்கவாதம் ஒரு கை கால் செயல் திறன் குறைவாக இருந்தால், கை நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருங்காலி கட்டைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மர நிழலில் அடிக்கடி அமர்ந்து கொண்டு இந்த கட்டை ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.

⚫⚫⚫⚫⚫

இந்த மரத்தில் தான் உலக்கை செய்வார்கள். உறுதியாக இருக்க பிரபஞ்ச ஆற்றல் உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி  அந்த தானியங்களை நாம் உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும். வயதுக்கு வந்த பெண்களின் அருகே இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள். சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள் எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.

⚫⚫⚫⚫⚫

அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று  அந்த கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்கள். பின்பு மனதார வேண்டி கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள் மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே மாதிரி குல தெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்பவர் இதே போல் பொங்கல் வைத்தால் அதற்கு ஒரே ஒரு சின்ன கருங்காலி கட்டை போட்டால் போதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கி வந்தால் குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

⚫⚫⚫⚫⚫

நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி மூலம் தலையில் மூன்று முறை தட்டி வரவேண்டும் ஒன்பது நாட்களில் குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும். மெதுவாக குச்சியை தலையில்  தொட்டு எடுக்க வேண்டும். 

ஒரு காலத்தில் பள்ளி கூடத்தில் இந்த குச்சியை தான் அடிக்க பயன் படுத்தினார்கள். வாத்தியார்கள் காலப்போக்கில்  குச்சி மாறி  விட்டது.

⚫⚫⚫⚫⚫

இந்த மரத்தில் தான் ஆதி காலத்தில் கடல் கடந்து செல்லும் படகுகளில்  பாய்மரம் கட்டுவார்கள். இடி மின்னல் செங்குத்தான இந்த மரத்தில் இறங்கி கடலுக்கு அடியில் சென்று விடும் அதற்கு தான்

 ⚫⚫⚫⚫⚫

வீதிகளில் ஜோசியம் குறி சொல்பவர் இந்த மர குச்சியை தான் நம் முன்னே நீட்டி கைகளில் வைத்தும் நம் மன எண்ணங்களை ஈர்ப்பார்கள். இப்போது உங்களுக்கு ஓரளவு இந்த மரத்தை பற்றி புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

 ⚫⚫⚫⚫⚫

கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள் சரியாக இந்த கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்

⚫⚫⚫⚫⚫

இந்த கட்டைகளை எரித்து அந்த சாம்பலை பேய் பிடித்து விட்டது என்கிறார்களே அது அந்த மன சிதைவு நோய்க்கு நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும்

இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.

⚫⚫⚫⚫⚫

கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்களை பற்றி பார்ப்போம்

கருங்காலி மரத்துன்டுகளுடன் தான்றிக்காய் கடுக்காய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல் சளி இதயபலவீனம் சர்க்கரை வியாதி  நீங்கும். இரத்த அழுத்தம் பிளட் பிரஸர் குறையும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

⚫⚫⚫⚫⚫

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்கவல்லது.

 ⚫⚫⚫⚫⚫

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலை குறைக்கும்

 ⚫⚫⚫⚫⚫

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும்  நீங்கும்.

⚫⚫⚫⚫⚫

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தும்

⚫⚫⚫⚫⚫

உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்மேலும் இவை வாய்ப்புண்ணை அகற்றி வாய்  நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.


⚫⚫⚫⚫⚫

கட்டுரை வெங்கடேஷ் ஈரோடு மாவட்டம்

⚫⚫⚫⚫⚫

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...