Sunday, January 16, 2022

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் (PAN) கார்டு செல்லாது.

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் (PAN) கார்டு செல்லாது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை தனி நபர்கள் இணைக்காமல் போனால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அபரதாம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாது பான் கார்டையும் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது.

பான் கார்டு உள்ள அனைவரும் அவர்களது ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பான் கார்டு ஆதார் கார்டை இணைக்க Link 

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற முகவரியில் நீங்களே உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண் , பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகக் கூடும். அதோடு 10,000 ரூபாய் வரை அபாதாரமும் விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இணைப்பது?

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்

2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்

3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்

எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.


1 comment:

  1. அண்மையில் (?) 2021 (?) பாராளுமன்ற நிதி மசோதா......

    ReplyDelete

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...