நம் கிராம தனித் திறமையால் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்-நேரு நினைவு கல்லூரி ஆண்டு விழாவில் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் வேண்டுகோள்.
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சுயநிதி பிரிவு ஆண்டு விழா மார்ச் 31ல், மூக்கபிள்ளை கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினார். மேலும் கல்லூரி ஏ பிளஸ் நாக் தர சான்று, மாணவ மாணவிகள் பல்கலைக்கழக தர வரிசை, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பெற்ற சாதனை, வேலைவாய்ப்பு பெற்ற விவரம் போன்றவற்றை ஆண்டறிக்கையாக வாசித்தார். முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி தலைமையுரையில், மாணவர்கள் நல்லொழுக்கம், நற்பண்புகள் பெற வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களை எவ்வளவுக் கடினமாக உழைத்துப் படிக்க வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் படித்தால் எந்தவொரு போட்டித் தேர்வாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
புத்தனாம்பட்டிக் கல்லூரியால் தான் இன்று பல கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெற்று உலகில் பலப் பொறுப்புகளில் உள்ளார்கள் என்று திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மேலும் மகாத்மா காந்திக் கூறியதைப் போல உங்கள் உயர் கல்வி கிராமப்புற மக்களுக்கு பயன் பெற வேண்டும். மாணவர்கள் கல்லூரியையும் கல்வி கொடுத்த ஆசிரியர்களை என்றும் மறக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்காக உழைக்கும் பெற்றோர்களை என்றும் போற்றி வணங்க வேண்டும். பெற்றோர் மாணவர்களிடம் நாட்டின் தலைசிறந்த குடிமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்கள் தனித் திறமையால் கடினமாக உழைத்தால் அனைவரும் பலப் பதக்கங்களை வெல்ல முடியும். அப்துல் கலாம் ஆறு வயதிலேயேச் செய்தித்தாள் வினியோகம் செய்து தனது கடினமான உழைப்பால் பல சாதனைகள் புரிந்து குடியரசுத் தலைவர் ஆனார்.
நமது கிராமத்தில் பலத்தனித் திறமைகள் இருக்கிறது அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உலகில் தலைசிறந்த இடத்தை அறிய முடியும். கோலி குண்டு விளையாடும் போது விரல் வலிமைப் பெற்று எழுத்துக்கள் சிறப்பாக எழுத முடியும், மூளை சிறப்பாக செயல்படும். பல்லாங்குழி விளையாட்டு மூலம் கணக்கிடுதல் சிறப்பாக செய்ய முடியும். நொண்டி விளையாட்டு மூலம் உடல் ஆரோக்கியம் அடையும். போன்ற பிரதமர் கருத்துக்களை மேற்கோள் காட்டினார். தலையாட்டி பொம்மை எப்படி சாய்ந்தாலும் நேராக நிற்கும், அதுபோல எந்த நிலைமை வந்தாலும் நிலை குறையாமல் நிற்க வேண்டும். நம்முடன் இணைந்து இருக்கும் கிராமப் பண்பாட்டைப் போற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கல்வியுடன் திறன் மேன்மை அடைய வேண்டும். நாம் கற்பது பல ஆண்டுகள் நிலைக்க வேண்டும். நம் நாட்டுப் பொருளுக்கு பல நாடுகள் போட்டிபோட்டு வர வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.
ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றால், அது வாழ்வின் மிகப்பெரிய சாதனை படைக்க ஊன்று கோலாக இருக்கும் என்று கல்லூரித் தலைவர் பொன். பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். அனைவரும் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும், இலக்குகளை அடைய திட்டமிடல் வேண்டும். இணையதள சேவை பயன்படுத்தி படித்து அறிவை மேம்படுத்த வேண்டும் என்று செயலர் பொன்ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்வி முகமைக்குழுவின் தேன்மொழி தங்கராஜா, மாலா பாலசுப்பிரமணியம் , சூர்யா உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு போட்டி மற்றும் கல்வியில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக வணிகவியல் இயக்குனர் மதிவாணன் நன்றியுரை வழங்கினார்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.