Sunday, March 13, 2022

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்வின் தொடக்கமாக வணிகவியல் துறை இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரையாற்றி விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர்.அ. இரா. பொன் பெரியசாமி அவர்கள் கல்லூரி குழு தலைவர் பொறியாளர். பொன். பாலசுப்பிரமணியன், செயலாளர். பொன், ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி (Ventura Securities Ltd) லிமிட்டட் கிளை மேலாளர் அ.தர்மராஜன் கலந்துகொண்டு பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது பற்றி மாணவ-மாணவிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார் இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியை அ.ஜன்னத்துல் பிர்தோஸ் அவர்கள் நன்றியுரை கூறினார்.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...