Friday, April 29, 2022

ஆரோக்கிய வாழ்விற்கு வழி: மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

ஆரோக்கிய வாழ்விற்கு வழி: மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.


  •  சுகர்னு docter கிட்ட போராங்க ..
  • அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
  • ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
  • மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
  • மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
  • அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
  • அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
  • அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

1.தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.

2.மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.

3.ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.

4.வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும் 

அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.


👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும், யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.


அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்


ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗


1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,

சளி பிடித்தல்,

இருமல்,

காய்ச்சல்,

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,

உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,

கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,

நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...