Monday, April 18, 2022

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அளவை நீட்டிக்க கோரிக்கை வந்ததை அடுத்து ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து டெட் தேர்வுக்கு விண்ணப்பிதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அளவை நீட்டிக்க கோரிக்கை வந்ததை அடுத்து ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து டெட் தேர்வுக்கு விண்ணப்பிதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,”ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள்1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டன. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் காலகெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதையடுத்து 18.04.2022 அன்று முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால அளவு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் கடந்த மாதம் 13ம் தேதி பட்டதாரி மற்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இந்த தேர்வு முதல் , இரண்டாம் தாள் எனும் வகையில் நடைபெறும். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள்  முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வினை எழுதலாம். முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது.

ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக பலரால் விண்ணபிக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி தான் பி.எட் இறுதியாண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால், விண்ணபிக்கக் கூடுதல் அவகாசம் வேண்டுமென்று சில தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...