தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்-கர்மா பொல்லாதது.
அதை வெல்ல யாராலும் முடியாதது..
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்..
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.
ராமதாஸ், சசிகலா, வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...
எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...
ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...
ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...
ஜெயலலிதா சிறைக்கு போகவேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...
ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.
மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....
கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை...
உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத்
தவறுவதும் இல்லை....
உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.
யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்
நன்மையை மட்டுமே விதைப்போம்.
நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....
பாவமன்னிப்பு என்ற மதச்சடங்கு,இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?
பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?.. உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம் நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.
தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் சேய்யும்.
🙏 இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட பெரியது தர்மத்தின் வாழ்த்து. அது நம் வம்சம் வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும் இன்று இருப்போர் நாளை இல்லை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம்.
Thanks : R.K.Subburaman
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment