Saturday, May 28, 2022

நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா அறிக்கை.

நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா அறிக்கை.


நேரு நினைவு கல்லூரியின் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை "C++ புரோகிராமிங்" குறித்த ஆன்லைன் மின்-வினாடி வினாவை 18-05-2022 முதல் 25-05-2022 வரை Code Venture கிளப்பின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்தது. Code Venture கிளப்பானது மாணவர்களின் நிரலாக்கம் திறன்களை மேம்படுத்துவதற்கான உருவாக்கபட்டது.                  UG/PG மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், விரிவுரையாளர்கள், புரோகிராமர்கள், உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.   60 கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / பள்ளிகளில் இருந்து சுமார் 835 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சான்றிதழ்களை வென்றனர். பங்கேற்பாளர்களுக்கு அடிப்படை, இடைநிலை மற்றும் கடினமான நிலைகளுடன் கூடிய இருபத்தைந்து கேள்விகள் கேட்கபட்டது. மின் வினாடி வினாவின் செயல்திறன் சராசரியாக 55.94 / 80 புள்ளிகளை பெற்றுள்ளது. மின்-வினாடி வினாக்களுக்கான பதில்கள் 26-05-2022 அன்று வெளியிடப்பட்டன, அவை மின்னஞ்சல் மூலம் தனிநபர்களுக்கு அனுப்பப்படும். 18-05-2022 அன்று காலை 5.30 மணியளவில் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர். திரு. முரளிதரன் அவர்களால் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கபட்டது. முனைவர் ப.கல்பனா, இணைப் பேராசிரியை, கணினி அறிவியல் துறை, ஒருங்கிணைப்பாளராகவும்,              திரு எஸ்.விக்னேஷ் (2K19CS173) மாணவர் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். பொறியாளர்.பொன்.பாலசுப்ரமணியன் கல்லூரி தலைவர், திரு.பொன்.ரவிச்சந்திரன் கல்லூரி செயலாளர், முனைவர். A.R.பொன்பெரியசாமி கல்லூரி முதல்வர், முனைவர்.M.மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பாளர் (சுயநிதி பிரிவு) ஆகியோர் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உத்வேகமாகவும், ஆதரவாகவும் இருந்தனர்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Friday, May 27, 2022

இஸ்ரோ உந்து விசை வளாகம், மகேந்திரகிரி மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா.

இஸ்ரோ உந்து விசை வளாகம், மகேந்திரகிரி மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா.


நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல்  துறை சார்ந்த 56 மாணவ மாணவிகள் 24.05.22  செவ்வாய்க்கிழமை  அன்று இஸ்ரோ உந்துவிசை வளாகம் மகேந்திரகிரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அங்கு உள்ள விண்வெளி அருங்காட்சியத்தில் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரேலில் உள்ள ராக்கெட்களின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள்கள் மாதிரி வடிவம் மற்றும் எரிபொருள்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி தெளிவாக விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தனர். மேலும் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளில் உபயோகப்படுத்தப்படும் திரவ எரிபொருள், திட எரிபொருள் கிரியோஜெனிக் இன்ஜின் செயல்படும் விதம் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் எவ்வாறு மகேந்திரகிரியில் தயாரிக்கப்படுகிறது அந்த எஞ்சின் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டது. பின்னர் ராக்கெட் என்ஜின் பரிசோதனை செய்யப்படும்   பரிசோதனை நிலையம் ஒன்று, பரிசோதனை நிலையம் இரண்டு ஆகியவற்றிற்கு மாணவர்களை நேரடியாக கூட்டி சென்று எவ்வாறு பரிசோதனை செய்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கினார்.




25.05.22 புதன்கிழமை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விண்வெளி மாதிரிகள் செயற்கைக்கோள்கள் செயற்கைக்கோள் மாதிரிகள் ராக்கெட் மாதிரிகள் போன்றவை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. விண்வெளியில் மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை, அவர்கள் அணியும் உடைகள், விண்வெளியின் தட்பவெப்பம் குறித்த அனைத்தும் தெளிவாக விளக்கினார்.

மேலும் இஸ்ரோ உருவான விதம், இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் எடுத்துக்கொண்ட முயற்சி, இஸ்ரோவால் விவசாயம், தொலைத்தொடர்பு, இயற்கை பேரிடர் பாதுகாப்பு, நாட்டின் ராணுவ பாதுகாப்பு, வெளிப்புறக் கோள்கள் பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு வளர்ந்துள்ளது என்பது பற்றி தெளிவான விளக்க காட்சிகளுடன் விளக்கப்பட்டது.

இறுதியாக ரோகிணி வகையை சேர்ந்த சவுண்டிங் ராக்கெட் மாணவர்களுக்காக செலுத்தப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஆனது விண்வெளியில் நிலவும் தட்பவெப்ப நிலை, வானிலை போன்றவற்றை அறிய அனுப்பப்பட்டது.






திருவனந்தபுரத்திற்க்கு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா https://keelainews.com/2022/05/27/try-31/


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, May 26, 2022

100% கல்விக்கட்டணச் சலுகையுடன் பட்டமேல் படிப்பு ( PG ) படிக்க மெரிட் ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு - 2022.

100% கல்விக்கட்டணச் சலுகையுடன் பட்டமேல் படிப்பு ( PG ) படிக்க மெரிட் ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு - 2022.





🌎 We have announced SHINE'2022, a meritorious scholarship examination for those who are eligible for studying 
M.Sc (Botany, Chemistry, Computer Science, Data Science, Physics, Chemistry, Mathematics and Zoology), MCA, MBA and MA (Tamil, English, Economics).

🏆🏅Appear and avail 
up to 100% scholarship during the PG studies at Nehru Memorial College ✨

🔗 Registration Link: 


🗓️ Exam Date: 11.07.2022 & 12.07.2022

🎯 Mode of Examination: Online

🎯 Exam Pattern: Multiple Choice Questions

🎯 Duration of the Examination: 1Hr

NOTE: Details about the examination will be informed via e-mail after registration.

NOTE:  Kindly fill in the registration form carefully.

📌 Kindly circulate among your friends, relatives and well-wishers…..!!!!

🌷BEST WISHES FROM NEHRU MEMORIAL COLLEGE 🌸






இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Sunday, May 22, 2022

✍🏻🍋🍋இயற்கை வாழ்வியல் முறை🍋🍋எலுமிச்சையின் நன்மைகள்.

✍🏻🍋🍋இயற்கை வாழ்வியல் முறை🍋🍋எலுமிச்சையின் நன்மைகள்.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. 

எலி மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்  தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை. 

🍋🍋🍋🍋🍋

இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

🍋🍋🍋🍋🍋

இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு வருகின்றன100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்.

நீர்ச்சத்து - 50 கிராம்

கொழுப்பு - 1.0 கிராம்

புரதம் - 1.4 கிராம்

மாவுப்பொருள் - 11.0 கிராம்

தாதுப்பொருள் - 0.8 கிராம்

நார்ச்சத்து - 1.2 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி

பாஸ்பரஸ் - 0.20 மி.கி

இரும்புச் சத்து - 0.4 மி.கி

கரோட்டின் - 12.மி.கி.

தையாமின் 0.2 மி.கி.

நியாசின் - 0.1 மி.கி

வைட்டமின் ஏ - 1.8 மி.கி

வைட்டமின் பி - 1.5 மி.கி.

வைட்டமின் சி - 63.0 மி.கி

 இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், 

ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப்புண் வாய்ப்புண் ஆறும்.


🍋🍋🍋🍋🍋

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்

துர் நாற்றம் மறையும். எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🍋🍋🍋🍋

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல்ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

கல்லீரலைப்பலப்படுத்த சிறந்த டானிக்எலுமிச்சை.

🍋🍋🍋🍋🍋

பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

🍋🍋🍋🍋🍋

சருமப் புண்களுககுஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்மறைகின்றன.

🍋🍋🍋🍋🍋

பாலேட்டுடன்எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🍋🍋🍋🍋🍋

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.

🍋🍋🍋🍋🍋

பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளைநீக்க உதவுகிறது. 

🍋🍋🍋🍋🍋

உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல்வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.

🍋🍋🍋🍋🍋

இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும்.

🍋🍋🍋🍋🍋

மனஅழுத்தம் ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம்   அளிக்கிறது இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🍋🍋🍋🍋🍋

காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

🍋🍋🍋🍋🍋

சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு சுவை தெரியும்.

🍋🍋🍋🍋🍋

தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.


 🍋🍋🍋🍋🍋

சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

🍋🍋🍋🍋🍋

இயற்கை அழகு, புத்துணர்ச்சிஉற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🍋🍋🍋🍋🍋

தேள்கொட்டினால்,  அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

🍋🍋🍋🍋🍋

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

🍋🍋🍋🍋🍋

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

🍋🍋🍋🍋🍋

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🍋🍋🍋🍋🍋

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டுஅதனால் அடங்காத கழிச்சலும் வாந்தியும் ஏற்பட்டால் சீரகத்தை தேன் விட்டு பொனனிறமாக வறுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி உட்கொள்ள கொடுத்தால்உடனே வாந்தியும் கழிச்சலும் எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம் வெறி உடல் சூடு அடங்கும்.

🍋🍋🍋🍋🍋

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

🍋🍋🍋🍋🍋

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும். சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும் அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

🍋🍋🍋🍋🍋

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும் எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🍋🍋🍋🍋🍋

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

🍋🍋🍋🍋🍋

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும் நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.

நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவரஅஜீரணம், பித்தம் தணியும் ரத்த அழுத்தம் சீராகும்.

🍋🍋🍋🍋🍋

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.

🍋🍋🍋🍋🍋

முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும்  தன்மை கொண்டது அதனால் தொற்று நோய் கிருமிகளின்தாக்குதலில் இருந்து உடலை கண் போல பாதுகாக்கிறது.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும் உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்

🍋🍋🍋🍋🍋

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🍋🍋🍋🍋🍋

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால்அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

வயிற்றுவலி வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு உயர்ந்த கிருமி நாசினி பொட்டாசியமும் இதில் உள்ளது.

உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம்.

🍋🍋🍋🍋🍋

சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும் உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும் கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🍋🍋🍋🍋🍋

எலுமிச்சை வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும். இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

🍋🍋🍋🍋🍋

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம்,பவானி.

🥨🥨🥨🥨🥨🥨

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🥨🥨🥨🥨🥨🥨

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

RAMESH : 9750895059

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...