Tuesday, August 30, 2022

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. செப்., 5 ஆம் தேதி துவக்கம்..

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. செப்., 5 ஆம் தேதி துவக்கம்..

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திட்டம் இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பம் மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
நிதி ஒதுக்கீடு இதனிடையே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

செப்.5ல் தொடக்கம்? 
இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப். 5ம் தேதி தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...