இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா நினைவு தினம் இன்று (ஜனவரி 24, 1966).
ஓமி யெகாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha) அக்டோபர் 30, 1909ல் மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். ஹோமி பாபா குழந்தையாக இருந்தபோது குறைவான நேரத்திலேயே தூங்கினார். பிற குழந்தைகளைப் போல இயல்பான தூக்கம் இல்லாததால் அவரது பெற்றோர்கள் கவலை அடைந்தனர். உடல் அளவில் உள்ள ஏதோ பிரச்சனை தான் இதற்கு காரணம் என எண்ணி கவலை அடைந்த பெற்றோர்கள் பிரபல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தனர். ஆனால் அப்போதுதான் ஹோமி பாபாவின் இருப்பது குறை அல்ல என்பதையும், அவர் தனித்துவமானவர் என்பதையும் பெற்றோர்கள் புரிந்து கொண்டனர். அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் மூளை அருவியாய் கொட்டும் சிந்தனைகள் போன்றவற்றால் தான் குறைவான அளவிற்கு தூங்குவதாக எடுத்துரைத்தனர். தனது மகனிடம் குழந்தைப் பருவத்திலேயே அதீத அறிவியல் சிந்தனைகள் எடுப்பதை உணர்ந்த ஜஹாங்கீர் பாபா வீட்டில் ஹோமி பாபாவின் தனியாக ஒரு நூலகத்தை அமைத்து அதில் அறிவியல் புத்தகங்களை வாங்கி கொடுத்தார். தந்தை தனது மகன் ஒரு சிறந்த பொறியாளராக உருவாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் மகனோ சிறந்த இயற்பியல் அறிஞர் ஆக வேண்டும் என்று எண்ணினார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார். 1930ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய பின்னர் தனது கனவுகளை நோக்கி பயணித்தால் இயற்பியலில் ஆராய்ச்சி மாணவராக தனது மேற்படிப்பை தொடர ஹோமி பாபா தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கிலாந்தில் உலக அளவில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் ஒருவர்தான் புரோட்டான் துகள்கள் இருப்பதை கண்டறிந்தது இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ரூதர்போர்டு. அவர் மட்டுமல்லாது டிராக், நீல்ஸ்போர், ஹைட்லர் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள் உடன் நண்பரானார். ஹோமி பாபா உங்கள் சிந்தனைகள் மேலும் செழித்தோங்கியது. அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.
1933ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில்
எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக்
நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற
செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு
உலகப்புகழைத் தந்தது. தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய ஹோமிபாபா
1935ஆம் ஆண்டு எலக்ட்ரான் பாசிட்ரான் சிதறல்
குறித்த தனது கணக்கீடுகளை வெளியிட்டார். அவரது இந்த ஆராய்ச்சியை பெருமைப்படுத்தும்
விதமாக பிற்காலத்தில் இந்த துறை பாபா ஸ்கேட்டெரிங் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்தோடு
நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று
அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான
ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த
மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது. தொடர்ச்சியான
அறிவியல் ஆய்வுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்த வருவதற்காக 1939 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
இந்திய அறிவியல்
துறையின் வளர்ச்சிக்கு நாட்டின் முதல் பிரதமர் என்கிற பெருமையுடன் இந்தியாவை
பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய பண்டித ஜவகர்லால் நேருவிடம்
இருந்தது.
அந்த வகையில் சுதந்திர இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த ஆலோசனைகள் வழங்கிய
அறிவுஜீவிகளில் பாபாவும் ஒருவர். பின்னிரவு நேரங்களில் கூட மணிக்கணக்கில் பாபாவுடன் பல்வேறு
விஷயங்கள் குறித்து விவாதிப்பது, பாபாவுடன் இருந்த நெருக்கமான நட்பை நேருவின் மகள் இந்திரா காந்தியே
பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இந்திய அறிவியல் பயிற்சி மையத்தில் தலைசிறந்த
விஞ்ஞானிகள் உருவாக அடித்தளம் போட்ட பாபா இயற்பியல் அறிவியலிலும் ஆராய்ச்சியிலும்
தனது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பயணித்து யுரேனிய ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை
சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். பாபாவின் தீவிர
முயற்சியால் தான் இந்தியாவில் முதன்முதலாக அணுசக்தி ஆராய்ச்சி மையம்
தொடங்கப்பட்டது. டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் என்கிற பெயரில் 1945ஆம் ஆண்டு
மும்பையில் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் முதலில் சிறிய வாடகை
கட்டிடத்தில்தான் இயங்கியது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அணுசக்தித் துறையில்
இந்தியா எழுச்சி பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அணு மின்சார
உற்பத்தி,
அணுகுண்டு ஆகியவை இந்தியாவின் வல்லமையை உலகிற்கு பறைசாற்றும் என்று பாபா பக்குவமாக
எடுத்து வைத்தார்.
பாபாவின் முயற்சியால் 1948ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்றார் ஹோமிபாபா. அதிலிருந்து 1966ஆம் ஆண்டு தான் இறக்கும்வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக 18 ஆண்டுகள் நீடித்தார். இந்த காலகட்டத்தில்தான் மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு அடித்தளங்கள் போடப்பட்டன. சக்தியை பெற யுரேனியத்தை எரிபொருளாக உலக நாடுகள் பயன்படுத்தி வந்த நிலையில் அதற்கு மாற்றாக தோரியத்தை முன்னிறுத்தி உலக நாடுகள் இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார் பாபா. தொலைநோக்கு பார்வையுடன் நாட்டில் யுரேனியம் குறைவாக இருப்பதையும், தோரியம் அபரிமிதமான அளவில் இருப்பதையும் கணக்கிட்டுப் பார்த்து தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான மூன்று படிநிலைகளை உருவாக்கி கொடுத்தார். அணுமின் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் நிலையை நோக்கிச் செல்வதற்கு இது அடித்தளம்.
ஹோமி பாபா நோபல்
பரிசு பெறவில்லை என்றாலும் அந்த பரிசைப் பெற 5 முறை பரிந்துரைக்கப்பட்ட என்கிற பெருமையைப்
பெற்றுள்ளார். இந்திய அரசு அவருக்கு 1954 ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது பெரிய
விருதான பத்மபூஷன் விருதை அளித்து கௌரவித்தது. ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், மைக்கேல்
ஃபாரடே போன்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதைகள் பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின்
பெல்லோஷிப் விருது பெற்றுள்ளார். அணுசக்தியை ஆக்கபூர்வமாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து
விவாதிப்பதற்காக ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு சர்வதேச கருத்தரங்கிற்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் ஹோமி ஜே பாபா. அவர் இந்த
கருத்தரங்கை நடத்திய விதமும் அணுசக்தியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த
ஊக்குவித்த விதமும் சர்வதேச அளவில் பெரும் மரியாதையை ஏற்படுத்தித் தந்தது. அணுசக்தி
என்றாலே அது அழிவு சக்தி தான் என்கிற கருத்து நிலவி வந்த நிலையில் அணுசக்தியை
அமைதி வழியிலும் பயன்படுத்தலாம் என ஜெனிவாவில் திறம்பட எடுத்துரைத்தார். ஒரு விஞ்ஞானி
என்பவர் எந்தவொரு தேசத்திற்குமானவர் அல்ல. அவர்கள் உலகத்திற்கான மனித குலத்திற்காக
பாடுபடுபவர். அறிவியல் உலகத்தின் கதவுகள்
திறந்தே இருக்க வேண்டும் என்று பாபா அடிக்கடி கூறுவதுண்டு. இந்திய அணு
ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த அணுக்கரு இயற்பியலாளர் ஓமி பாபா ஜனவரி 24, 1966 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து
கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து
நொறுங்கியதில் தனது 56வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment