திருச்சியில் வரும் 29-ம் தேதி முதல் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Group-I) தொகுதி 1ற்க்கான92 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கானஇலவச பயிற்சி வகுப்பு திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.08.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிப்பரப்பாகும் எளவும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீர புத்தகங்களின் மென் நகல்(Softcopy), முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளிமாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment