கொடுத்த வாக்கு-ஊக்கமளிக்கும் உந்துதல் கதை.
அந்த நாள் காலைப் பொழுது, கதிரவன் உதிக்க தொடங்கியது. ஆனால் அந்த காலைப் பொழுது ஒருவனுக்கு மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது. அவன் வீட்டின் வெளியே வந்து பார்க்கும்பொழுது ஒரு பெட்டி ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்தால், அடுக்கடுக்காக பணம் அடிக்கிருந்தது. அதில் சுமார் ஒரு கோடி இருக்கும் போல. இதை பார்த்த அவனுக்கோ ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி. இவன் மனதில் பல கேள்விகள் எழுந்தது. இதை யார் இங்கு வந்து வைத்திருப்பார்கள் என்றும், இதை ஏன் என் வீட்டில் வைக்க வேண்டும் என்றும். இதை யார் வைத்தார்? வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பல கேள்விகள் மனதில் எழுந்தன. சரி! இவன் யார்?
ஒரு சிறு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் முத்தரசன். இவன் ஒரு விவசாயி. சுமார் பத்து ஏக்கருக்கு சொந்தக்காரன். இரவு பகல் என்று அவன் வயலிலையே இருப்பான். இவனுக்கு வயது 29. நான்கு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்தவன். பொங்கல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு ............
ஒருநாள் சைக்கிளில் அப்பாவும் அம்மாவும் அருகில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவனது தாத்தாவை பார்க்க சென்றிருந்தனர். இருவரும் பேசி சிரித்துக்கொண்டு சந்தோசமாக அப்பா சைக்கிளை மிதிக்க, அம்மா பின்னால் அமர்ந்து கேட்க மகிழ்ச்சியாக சென்றனர்.
இவ்வாறு மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது, நரி கூட்டமானது ஒரு சிறிய விலங்கு-ஐ சூழ்ந்து வேட்டையாடுவது போல, பெரிய பெரிய மரங்கள் இடியால் தாக்கப்பட்டு கீழே சாய்வது போல, அவர்கள் ஒருவரின் மகிழுந்து ஒன்றால் இடித்து தூக்கி எறியப்பட்டனர். அந்த விபத்தில் இருவரது மூச்சும் நின்றுவிட்டது. இந்த செய்தி -ஐ அறிந்த முத்தரசன் மிகவும் மனமுடைந்து கதறி அழுது கொண்டிருந்தான். அதாவது, ஒரு கன்று தன் தாயை இழந்து எவ்வாறு பரிதவிக்குமோ, அவ்வாறே அவனது நிலையும் இருந்தது. பின் அவன் அவனது தாத்தாவின் வீட்டில் வளர்கிறான்.அவனது தாத்தாவும் துணையின்றி இருந்தார். அதற்குப்பின் இவன் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தான். ஒரு வருடம் முடிந்தது............
தாத்தா வீடானது மிகவும் சிறியது. அதாவது ஒரு சிறிய அறையும், நீண்ட அகலமான சூரிய ஒளி உள்ளே வருமாறு உள்ள ஒரு அறையும், வீட்டின் வெளியே இரண்டு பெரிய திண்ணைகளும் இருந்தன. அவன் எப்பொழுதும் அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்பவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.
சில மணி நேரம் கழித்து ஒருவர் அத்தெருவில் நடந்து செல்வதை பார்த்தான். அவரோ பார்ப்பதற்கு படித்தவர் மாதிரியும், ஒரு சிறிய பெட்டியையும் கையில் பிடித்திருந்தார். சரி! அவரிடம் சென்று கேட்கலாம் என்று முடிவு செய்தான். அவர் பெயர் சிவா. அவரிடம் சென்று “அண்ணா என்று அவரை அழைத்து அண்ணா உங்களுக்கு பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று தெரியுமா? என்று கேட்டான். அதற்கு ம்ம்ம்....ம்ம்ம்..... தெரியுமே என்றார். ஏன் எதற்கு அதைப் பற்றி கேட்கிறீர்கள் என்று அன்புடனும் சிறுபிள்ளை ஆனாலும் முத்தரசனுக்கு மரியாதையை கொடுத்தும் பேசினான் சிவா.
இல்லை அண்ணா! என் வயதில் இருக்கும் பசங்க எல்லாம் பள்ளிக்கூடம் போறத பார்த்தே.....அதான் உங்ககிட்ட அதை பத்தி கேட்களாம்னு நினைச்சே என்று கூறினான்.
பின் சிவா சொல்ல துவங்குகிறார், சொல்கிறேன் கேள், பள்ளிக்கூடம் என்பது கோவிலுக்கு நிகரானது, அங்கு எப்படி தெய்வத்தை வணங்குவார்களோ அதுபோல இங்கு ஆசிரியரை வணங்க வேண்டும். முத்தரசன் ஆசிரியர் என்றால் என்ன கடவுளா? என்றான். இல்லை கடவுளுக்கும் மேல் குரு என்றார் சிவா. அப்படின்னா..? குருன்னா..? இவன் சிறுபிள்ளை என்பதால் இவர் கூறுவது சற்று புரியவில்லை. சரி! உனக்கு புரியும்படி கூறுகிறேன் கேள், ஆசிரியர் என்பவர் அனைத்து கல்வியையும் கற்று பல தகவல்களை அறிந்தவராக இருப்பார். அதை அங்கு செல்லும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். அதாவது நீ எவ்வாறு என்னிடம் வந்து இப்படி கேள்வி கேட்கிறாயோ அது போலவே! அங்குள்ள மாணவர்களும் ஆசிரியரைப் பார்த்து கேள்வி கேட்பார்கள். சரி அண்ணா! எனக்கு புரிந்தது என்று கூறிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். பின் சிவா நடக்கலானார்.
அவர் மனதிற்குள்ளே “ஆனால் இப்போ எல்லாம் அப்படிப்பட்ட ஆசிரியர் எல்லாம் இல்ல........ காலம் மாறிடுச்சு...... எல்லாம் காசு கொடுத்தா..... கண்டவனுக்கு எல்லாம்....... படிப்ப குடுத்தறாங்க....... வேலையும் கொடுத்துறாங்க..........” என்று நினைத்துக் கொண்டார். சிவா அவ்வாறு சொன்னதுக்கு காரணம் உண்டு, இவர் ஒரு கல்லூரியின் பேராசிரியர். பின் இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே கல்லூரிக்கு சென்றார் சிவா.
முத்தரசனும், தாத்தாவிடம் சென்று தாத்தா நானும் பள்ளிக்குப் போகணும் என்று கேட்க, டேய் கண்ணா! உன்னை பள்ளிக்கு அனுப்புற அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல......காசும் இல்ல....... என்று கூறினார். முத்தரசன் மனது சுக்கு நூறாக உடைந்தது. எதுவும் பேசாமல் அறைக்கு சென்று படுத்து அழுது கொண்டே இருந்தான். இதை பார்த்த தாத்தாவோ இவனை பள்ளிக்கு அனுப்பினால் தான் என்ன?.... இவனும் சிறுபிள்ளைதான்...... இப்போதுதான் படிக்க முடியும்......... அப்பதானே பெரிய ஆளா வந்து இவன் வாழ்க்கைய பார்த்துக்க முடியும்......... எனக்கு அப்புறம் அவன யார் பார்த்துப்பா? சரி! பள்ளிக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்று அன்று இரவு படுத்துக்கொண்டு சிந்தித்துக் கொண்டே இருந்தார். அடுத்த நாள் விடிந்தது. தாத்தா, முத்தரசனை பார்த்து நீ பள்ளிக்கு போக ஆசைப்படுறியா என்று கேட்க, உன்னால தான் படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டியே விடு தாத்தா என்று கோவத்துடனும் பெரியாள் மாதிரியும் பேசினான்.
ஏண்டா கோவ படற சரி வா பள்ளிக்கு போகலாம் என்று தாத்தா கூற வானத்துக்கும், மேகத்துக்கும் குதித்து உண்மையாவா தாத்தா பள்ளிக்கு போகலாமா என்று கேட்டான். ஆமாண்டா கண்ணா வா போலாம் என்றவுடன், சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்கள் போல அவன் முகத்தில் அவ்வளவு ஆனந்தம் பின் அவன் தாத்தாவும் அவனும் பள்ளிக்கு சென்றனர். அந்த பள்ளி அரசு பள்ளி என்பதால் பணம் ஏதும் கேட்காமல் இலவசமாக சேர்த்துக் கொண்டனர். நன்றாக படித்தான், ஆசிரியர்கள் விரும்பும் மாணவன் ஆனான் வகுப்பில் முதல் மதிப்பெண்ணும் எடுத்தான். தாத்தாவும் சந்தோஷத்தில் இவன் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டார். சில வருடங்கள் சென்றன..... (ஐந்து வருடங்கள்)
ஒரு நாள் முத்தரசன், இப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அரையாண்டு தேர்வும் வந்தது. தாத்தாவும் அவனும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தாத்தா படுக்கை அறைக்கு சென்றார். ஆனால் இவன் படித்துக் கொண்டிருந்தான்.ஏனென்றால் அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருப்பதால். திடீரென்று, தாத்தாவின் சத்தம் கண்ணா! என்று முத்தரசன் ஓடிப் போய் பார்த்தான். தாத்தா கூப்பிட்டது மாதிரி இருந்ததே ஆனால் தாத்தா தூங்கிக் கொண்டு அல்லவா இருக்கிறார் என்று சற்று தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.. அடுத்த நாள், சூரியன் எழத்தொடங்கினான், அப்படியே சூரிய ஒளி முத்தரசன் படுத்திருந்த அறையின் சன்னல் வழியே உள்ளே வந்து அவன் மீது பட்டது. அவன் எழுந்து பா்க்கையில் அப்பொழுது காலை 06:30 மணி, அவன் தாத்தாவை பார்க்க வந்தான். என்ன இது மணி ஆறு முப்பது ஆயிடுச்சு தாத்தா தூங்கிட்டே இருக்கிறாரோ எப்போதும் 5:00 மணிக்கு எந்திரிச்சு என்ன எழுப்பி படிக்க சொல்லுவாரு ஆனா இன்னைக்கு தூங்கிகிட்டே இருக்கிறாரே சரி போய் பார்த்து கேட்போம் என்று மனதில் நினைத்து கொண்டு தாத்தாவிடம் வந்தான். நான் வேற இன்னும் முழுசா படிக்கல எப்படி மார்க் வாங்க போறேன்னு தெரியல தாத்தா வேற என்ன எழுப்பவே இல்ல என்ன ஆச்சு இன்னைக்கு தாத்தாவுக்கு அவர் என்னன்னா இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்காரு அவர் எப்பவும் இவ்வளவு நேரம் தூங்கமாட்டாரே தாத்தா! தாத்தா! என்று இரு முறை கூப்பிட்டான். ஆனால் தாத்தாவோ எதுவும் பதில் கூறவில்லை. மயக்கம் அடைந்து விட்டார் என்று நினைத்து தண்ணீர் தெளித்தான். அப்பொழுதும் எழுந்திருக்கவே இல்லை. சரி! பக்கத்து வீட்டில் இருக்கும் ராஜா ஐயாவை கூட்டிட்டு வருவோம் என்று மனதில் நினைத்து பக்கத்து வீட்டுக்குச் சென்றான். அவர் வீட்டுக்கு வந்து தாத்தாவைப் பார்த்தார். அவரோ என்னையா........ இந்த சின்ன பயல இப்படி தவிக்க வச்சிப்புட்டு போய்டியே......... ஏன்யா........இந்த குழந்தை என்ன தப்பு செஞ்சுச்சு என்று கதறி அழுதார்.
முத்தரசனுக்கு ஒன்றும் புரியவில்லை சிறுபிள்ளை அல்லவா! ஐயா என்னாச்சு ஏன்? இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்டான். அதை நான் எப்படி என் வாயால சொல்லுவே கண்ணா! என்று கூற, உன்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டாரே டா கண்ணா! என்று அழுது கொண்டே சொன்னார். இப்பொழுது தான் முத்தரசனுக்கு புரிய ஆரம்பித்தது.
அவனோ தன் மீது இடி விழுந்தால் போல் பெரிய மலை சரிந்தது போல் துவண்டு கீழே விழுந்தான், காவிரி ஆற்றில் எப்படி தண்ணீர் செல்லுமோ அப்படி அவன் கண்களில் இருந்து தண்ணீர் கொட்ட கதறி வேகமாக தாத்தா காலை பிடித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தான். பின் அனைத்து சடங்குகளும் முடிந்தன............
அந்த நாள் இரவு தனியாகவே அந்த வீட்டில் இருந்தான். அவனுக்கென்று துணையாக இருந்த தாத்தாவும் இறந்துவிட்டார். அவனுக்கு உணவு மட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ராஜா கொடுத்து வந்தார். அவன் தனியாகவே இருக்க பழக்கப்படுத்திக் கொண்டான். இன்னும் இரண்டு மாதங்கள் கடந்தன............
முழு ஆண்டு பரீட்சை தொடங்கலாயிற்று. அதன் பின் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும். ஆனால் இவன் இருக்கும் ஊரிலோ ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் படிக்கும் முடியும். ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் வெளியூருக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் வெளியூர் சென்று படிக்கும் அளவிற்கு பணமும், அழைத்து செல்வதற்கு துணையோ யாரும் இல்லை. அதனால் மிகவும் மனமுடைந்து இருந்தான். ஐந்தாம் வகுப்பு நிறைவு பரிட்சை முடிந்தது, இதுவே நாம் பள்ளிக்கு வரும் கடைசி நாள் என்று மனதில் நினைத்து கொண்டு பள்ளியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தான். அங்கே பணிபுரியும் ஒரு ஆசிரியர் அவனிடம் வந்து, முத்தரசா உனக்கு என்னவாயிற்று? என்று கேட்க உண்மையை கூறினான்.
இனிமேல் என்னால் படிக்க முடியாது. என்னை இனிமேல் படிக்க வைப்பதற்கு யாரும் இல்லை என்று கலக்கத்துடனும்,கண்ணீருடனும் கூறினான். பின் அவன் ஆசிரியரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டு சென்று விட்டான்.
மூன்று நாட்கள் முடிந்தன......... அவனும் சோகக்கடலில் துவண்டு இருந்தான். ஏனென்றால் அவன் பள்ளிக்கு செல்லாத காரணத்தினால். பின் அந்த ஆசிரியர் முத்தரசன் வீட்டிற்கு வந்தார். இவர் பெயர் கருப்பையா. இவர் வீட்டிற்கு வந்திருப்பதை முத்தரசனால் நம்பவே முடியவில்லை. வாங்கய்யா! என்று உள்ளே அழைத்து, தமிழ் பண்பாடுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். நீங்கள் வந்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை ஐயா.ஆம் நான் தான் வந்திருக்கிறேன் என்று ஆசிரியர் கூறினார். பின் அவன் ஆசிரியருக்கு கீழே அமர்ந்து கொள்கிறான். ஆசிரியர் அவனிடம் உனக்கு படிக்க வேண்டும் என்று ரொம்ப விருப்பமாக உள்ளதா என்று கேட்டார். ஆம் எனக்கு மிகவும் விருப்பமாக உள்ளது ஐயா என்று முத்தரசன் கூறினான். ஆனால் என்னிடம் பணமோ என்னை பள்ளியில் சேர்த்து விடுவதற்கு உடனோ யாரும் இல்லை என்று கூறி சோகக்கடலில் துவண்டு விடுகிறான். அதற்கு ஆசிரியர் சரி நான் உனக்கு பணம் தருகிறேன் பள்ளியிலும் சேர்த்து விடுகிறேன் படிக்கிறாயா? என்று கேட்டார். இதை கேட்ட முத்தரசனின் கண்களில் நீர் பெருக்கெடுத்து கலக்கத்தில் நீங்கள் என்னை படிக்க வைப்பீர்களா என்று கேட்டான். ஆம், நான் தான் என்று ஆசிரியர் கூறினார். உடனே ஆசிரியரின் கால்களை தொட்டு கும்பிட்டு கை கூப்பி வழங்கினான். நான் இதற்கு உங்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை ஐயா என்று கூறி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டான். நாளைக்கு நமது ஊருக்கு பக்கத்தில் இருக்கிற டவுன்ல இருக்க ஸ்கூல்ல சேர்த்து விடுறேன் நம்ம போய் பார்க்கலாம் அங்கே.
நாளைக்கு.காலை-ல ஒன்பது மணிக்குலாம். ரெடியா இரு பள்ளிக்கு போகணும்-ல என்று கூறி புறப்பட்டார். ஆனால் இவனுக்கோ அன்று இரவு தூக்கமே வரவில்லை. ஏனென்றால் அடுத்த நாள் பள்ளிக்கு போக போறோம் என்ற உற்சாகத்திலும்,இப்படி ஒரு திடீர் அதிசயம் நடந்ததை நினைத்தும். பின் யோசித்துக்கொண்டே உறங்கினான்.காலையில் சூரியன் உதித்தான் .இவனும் எழுந்து குளித்து முடித்து ஒன்பது மணிக்குள் அனைத்து வேலையை முடித்துவிட்டு கிளம்பி ஆசிரியர்க்காக காத்திருந்தான். ஆசிரியரும் வந்தார். இவனைக் கூட்டிக் கொண்டு பேருந்தில் ஏறினார். பேருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இவன் ஆசிரியர் பார்த்து நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று தயங்கி கேட்டான். சரி கேளுடா என்று ஆசிரியர் கூறினார்.நீங்கள் ஏன் எனக்காக இவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவரோ அதெல்லாம் ஒன்றுமில்லை........சும்மாதான் என்றார்.ஏதோ சொல்ல வந்து மறைத்தது போல் இவனுக்கு தோன்றியது. இதற்கு இவன் ஒன்றும் அவரிடம் கேட்கவில்லை. இவர்கள் இருவரும் பள்ளியை வந்தடைந்தனர். இந்த பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். பள்ளியில் மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். ஏனென்றால் மணி 9:15 அதனால் பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் என்றால் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்றுதான் அர்த்தம்.இவர்கள் இருவரும் தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் சென்று நின்றனர். அங்கே இருந்த தலைமை ஆசிரியர் இந்த ஆசிரியரை பார்த்துவிட்டு எழுந்து வாங்க சார் குட் மார்னிங் என்று கூறினார். இந்த தலைமையாசிரியரின் பெயர் கதிரேசன்.முத்தரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.ஏன்?இவரை இப்படி எழுந்து ஒரு தலைமை ஆசிரியர் .வணங்குகிறார். தலைமை ஆசிரியர் எழுந்து வணங்குவதற்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால் அவர் மொத்தம் இருபத்தி நான்கு மாணவர்களை இவரது சொந்த பணத்தில் படிக்க வைக்கிறார். அதுவும் இந்த பள்ளியில் தான் முத்தரசனும் ஆசிரியரும் தலைமை ஆசிரியர் அறைக்குள் உள்ளே சென்றனர். ஆசிரியர் தலைமையாசிரியரை நலம் விசாரித்துவிட்டு இங்கு வந்த காரணத்தைக் கூற ஆரம்பித்தார்.இவன் பெயர் முத்தரசன். இவன் இங்க படிக்க விரும்புகிறான். உங்கள் பள்ளியில் இவனை சேர்ப்பதற்காகவே வந்தேன் என்று கூறுகிறார். தலைமையாசிரியர், சரி இவனை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். உடனே அட்மிஷன் பார்ம் எடுத்து கொடுத்தார்.இதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி தாருங்கள் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தலைமையாசிரியர் கூறினார்.ஆசிரியர் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் சரியாக நிரப்பி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். தலைமை ஆசிரியரோ இதனை பார்த்து விட்டு நாளையிலிருந்து பள்ளிக்கு வர சொல்லுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார்.
நல்லது என்று கைகூப்பி வணங்கி ஆசிரியர் தலைமையாசிரியர் அறையிலிருந்து வெளியே வந்தார்.நடந்ததை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தான் முத்தரசன். ஏன் ஆசிரியரைப் பார்த்து தலைமையாசிரியர் எழுந்து வணங்க வேண்டும்? ஏன் என்னை ஆசிரியரே வந்து பள்ளிக்கு சேர்க்க வேண்டும்? என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். சிறிது நேரத்திற்கு பின் ஆசிரியரிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தான். ஆசிரியரிடமும் கேட்டான். அதற்கு ஆசிரியர் எனக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் வசதி வாய்ப்பற்ற நன்கு படிக்கும் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்று அவனிடம் ஆசிரியர் கூறினார். இப்பொழுதுதான் முத்தரசனுக்கு சரியாக புரிந்தது. இதைக்கேட்ட முத்தரசனோ இதை நாம் கேட்டிருக்கவே கூடாது மிகவும் தவறு செய்துவிட்டோம் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான். ஆசிரியர்க்காகவாவது நன்கு படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். நம் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.பின் ஊருக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். முத்தரசன் ஆசிரியரிடம் நன்றி கூறி காலைத் தொட்டுக் கும்பிட்டு சென்றான்.
அடுத்த நாள் பள்ளிக்கு ஆர்வமாக கிளம்பினான். ஆசிரியரும் வந்தார். இவனை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டார். பள்ளிக்கு செல்வது பள்ளிக்கு வருவது முதல் நாள் என்பதால் அவனுடைய வகுப்பறையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.சிறிதுநேரம் கழித்து அங்கே பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை கேட்டு இவனது வகுப்பறையை அறிந்து கொண்டான்.வகுப்பறையை கண்டுபிடித்து அங்கே சென்றான்.முதல் நாள் என்பதால் அங்கு யாரையும் இவனுக்கு தெரியாது.இவன் நான்காவது வரிசையில் சென்று அமர்ந்தான். அங்கே இவனுடன் இரண்டு மாணவர்கள் வந்து உட்கார்ந்தனர். அவர்களுடன் தயக்கமாக பேசிக் கொண்டிருந்தான். முதல் நாள் என்பதால் மட்டுமே. அங்கே ஒரு ஆசிரியர் வந்தார். அவர் அனைவரையும் எழுந்து பெயர் கூற சொன்னார். பின் பள்ளியின் சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் பள்ளியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும். கூறினார்.பின் அந்த நாள் முடிந்தது. இரண்டு நாட்கள் சென்றது.....
முத்தரசன் எப்பொழுதும் அந்த இரண்டு நண்பர்களுடன் தான் இருப்பான் அவர்களின் ஒருவன் பெயர் மகிழன். மற்றொருவன் பெயர் முருகன். இவர்களில் ஒருவன் சுமாராகவும், மற்றொருவன் இவனுக்கு நிகராகவும் படித்தான். ஆனால் படிக்கும் பொழுதும் தேர்வின் பொழுதும் மூவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பர். நல்ல மதிப்பெண்களும் எடுத்தனர். இது போன்று மூன்று வருடங்கள் கடந்தன....... இவர்களில் முருகன் என்பவன் வேறு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க சென்றுவிட்டான். இவனது பெற்றோர்கள் வேறு ஊரிற்கு சென்றனர் அதனால் இவனும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். ஆனால் முருகனுக்கு இவர்களை விட்டு செல்வதற்கு உடன்பாடே இல்லை இருந்தாலும் பெற்றோர்களுக்காக சென்றான். அவன் செல்லும் முன்பு மூவரும் ஒரு சபதம் செய்து கொண்டனர். நாம் எங்கு சென்றாலும் பிரிந்தாலும் மே மாதம் சந்திக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். பின் முருகன் சென்றான். பின் இரண்டு வருடம் கழித்து மேற்படிப்பிற்காக மகிழனின் பெற்றோர்களும் வேறு ஒரு பள்ளியில் சேர்த்தனர். ஆனால் முத்தரசன் அதே அரசு உதவி பெறும் பள்ளியிலே படித்தான். 12 ஆம் வகுப்பு முடித்தான். மே மாதம் அன்று மூவரும் சபதம் எடுத்தது போல் ஒரு மரத்தின் அருகே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் படிக்கும் பள்ளிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பின் முருகன் கூறினான், நான் உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். நான் ஒருத்தியை காதலிக்கிறேன் அவளும் என்னை காதலிக்கிறாள் என்று கூறினான்.
இருவரும் அப்படியா என்று ஒரு சேர கேட்டனர். சரி உனது பெற்றோர்களுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் தெரியுமா என்று கேட்டனர். எனது பெற்றோர்களுக்கு தெரியும், ஆனால் அவளது பெற்றோர்களுக்கு தெரியாது என்று கூறினான். ஓ சரி என்றான் முத்தரசன். மகிழனோ நன்றாக இரு ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நில் என்றான். பின் மூவரும் பிரிந்து சென்றனர் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன. மூவருமே தேர்ச்சி பெற்றனர். பின் கல்லூரியில் சேர விரும்பினர். மூவரும் எதிர்பாராத விதமாக ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். பின் கல்லூரி வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் முருகன் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது அந்த மற்ற இரண்டு நண்பர்களுக்கும். உடனே இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். என்னவாயிற்று என்று அவனது அம்மாவிடம் கேட்கும் பொழுது விஷம் குடித்து விட்டான் என்று கூறினார்கள். மற்ற இரண்டு நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின் வேறு எதுவும் பேசாமல் ஓரமாக நின்றனர். மருத்துவர் முருகனின் அறையில் இருந்து வெளியே வந்தார் முருகனது தாயார் மருத்துவரிடம் சென்று என் புள்ள எப்படி இருக்கா ஐயா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கதறிக் அழுது கொண்டு கேட்டார். மருத்துவர் அதையெல்லாம் ஒன்றுமில்லை ஒரு மணி நேரத்திற்கு மயக்கமாக இருப்பார் அப்புறம் நீங்கள் அவருடன் பேசலாம் என்று கூறினார் மருத்துவர். ஏன் அவர் விஷம் அருந்தினார் என்று கேட்டார். அவன் தாயார் எனக்கு தெரியலை சாமி என்று கூறினார். பின் மருத்துவர் வேறு எதுவும் கேட்காமல் சென்றார் ஆனால் இரண்டு நண்பர்களையும் ஒரு மேற்பார்வையுடன் பார்த்துக் கொண்டு சென்றார். பின் ஒரு மணி நேரம் கழிந்தது...... முருகனை சென்று அவன் தாயார் பார்த்தாள், என்னடா இப்படியாடா உன்னை வளர்த்தே....
நீ விஷம் குடிப்பதற்காக உன்னை வளர்த்தே....... ஏன்டா இப்படி பண்ணுன என்று கதறி அழுதால் முருகன் தாய். பின் சிறிது நேரம் கழித்து இருவரும் முருகனிடம் சென்று, உனக்கு என்னவாயிற்று ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான் மகிழன் அதற்கு, முருகன் ஒன்றும் இல்லை சும்மாதான் என்று கூறினான். உடனே முத்தரசன் ஓங்கி ஒரு அரை விட்டான் முருகன் கன்னத்தில் என்னடா நினைச்சுகிட்டு இருக்க ஏன் இப்படி பண்ண உண்மைய சொல்லுடா இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது......என்று கூறினான் முத்தரசன். பின் முருகன் உண்மையை கூறினான். என் காதலி என்னை விட்டுவிட்டு போயிட்டா அவளை நான் உயிருக்கு உயிர காதலிச்சே ஆனா அவ என்ன தூக்கி போட்டுட்டு போயிட்டா என்றான். மறுபடியும் ஓங்கி ஒன்னு விட்டான் முத்தரசன் ஆனால் இம்முறை மகிழனும் ஒரு அரை விட்டான். ஏன்டா ஒரு பொண்ணுக்காக சாகத் துணிந்துட்டியா உன்னை பெத்து வளர்த்த அம்மாவை நினைச்சு பார்த்தியா, உங்க அம்மா உன் மேல வச்சிருக்க பாசம் உனக்கு தெரில. ஏன் நீ மட்டும் இல்ல எல்லா பசங்களும் பாதில வர பொண்ணுக்காக உயிரையே விட நினைக்கிறாங்க......ஆனா சோறு போட்டு ஆளாக்குனு அம்மாவா நினைக்குறாங்களா......... நாங்களா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் புரியாது...... எத்தனை வாட்டி பட்டாலும் திருந்த மாட்டீங்களா என்று கூறினான் முத்தரசன்.
பின் இருவரையும் கட்டி அணைத்து, இனிமே இது மாதிரி செய்ய மாட்டேன். என்ன மன்னிச்சிருங்க டா....... என்று கூறினான். பின் மூவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருந்தனர். மருத்துவர் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று கூறினார். பின் அனைவரும் வீடு திரும்பினர். முருகன் அந்தப் பெண்ணை தன் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டான். பின் மூவரும் கல்லூரி படிப்பை முடித்தனர். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து திளைத்து நின்றனர்.
மகிழன் ஒரு கம்பெனிக்கு 18000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான். முருகனும் தன் சித்தப்பாவின் கடைக்கு வேலைக்கு சேர்ந்து விட்டான். ஆனால் முத்தரசன் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தான். இவன் படித்ததோ வேளாண்மை சார்ந்த பாடம். எனவே இதற்குப் பின் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான். யோசனை கேட்பதற்கு அந்த ஆசிரியரோ இல்லை. இவனுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவர் உயிர் பிரிந்தது. அதற்குப்பின் இவனுக்கு வழிகாட்ட யாரும் இல்லை சிறிது காலத்திற்குப் பிறகு தன் தாத்தாவின் பெயரில் மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதை அறிந்தான். அதில் 5 ஏக்கர் மட்டுமே இப்பொழுது உள்ளது, மற்ற ஐந்து ஏக்கர் வேறு ஒருவரின் பேரில் இருப்பது இப்பொழுதுதான் தெறிய வந்தது. அவர் வேறு யாருமல்ல இவனது சித்தப்பா. இவனது சித்தப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். பின் அந்த நிலம் யாருக்கு? என்று யோசிக்கலாம். ஆம் தாத்தாவின் அப்பா ஒரு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மொத்தம் பத்து ஏக்கர் உள்ளதாகவும், அதில் ஐந்து ஏக்கர் உனக்கு பிறந்திருக்கும் முதல் மகனுக்கும், மீதமுள்ள ஐந்து ஏக்கர் இரண்டாவது மகனுக்கும் என்று எழுதி இருக்கிறார்.
இதன்படி தான் நிலம் இவ்வாறு பிரிந்தது. சில நாட்களுக்குப் பின் இவனுக்கு தெரிய வந்தது அந்த ஐந்து ஏக்கர் நிலமும் வேறு ஒருவர் பெயரில் உள்ளது என்பது. ஆனால் முத்தரசனும் எந்த ஒரு பதிலும் பேசாமல் எதிர்த்து நிற்க முடியாமல் அதை கைவிட்டான். ஒரு நாள் அவன் வீட்டு வாசலில் சுமார் ஒரு கோடி இருந்தது. இதை பார்த்த முத்தரசனுக்கு பல கேள்விகள்? இந்த பணம் யாருடையது? இங்கே எப்படி வந்தது? என்று பல கேள்விகள் அவன் மனதில். பின் ஒரு அதிகாரமான குரல் தம்பி! என்று இந்த குரல் யார் என்றால் அவ்வுரின் பண்ணைக்காரர். பண்ணைகாரர் என்றால் நம் அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு பெரிய இடத்துக்காரர் என்று. பெரிய வீட்டுக்காரர் அல்லது பெரிய இடத்துக்காரர் ஊரின் தலைவராகவும் இருக்கலாம். இவருக்கு சுமார் 30 ஏக்கர் நிலமும், பத்து மாடுகளும், 20 வேலை ஆட்களும் மற்றும் இரண்டு மகிழுந்துக்களும் இருந்தன.
இவர் தன் வீட்டிற்கு வந்திருப்பதை நினைத்து முத்தரசன் ஆச்சரியத்தில் திளைத்து நின்றான். இவர் ஏன் என் வீட்டிற்கு வரவேண்டும்? எனக்கு எதற்கு பணம் தர வேண்டும்? என்று பல கேள்விகள் அவனது மனதில். பண்ணைக்காரர், முத்தரசனிடம் நீ நன்றாக இருக்கிறாயா? உனக்கு ஏதும் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறு என்றார்.
ஆனால் முத்தரசன் இதையெல்லாம் நீங்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டான். ஒன்றும் இல்லை சும்மாதான் தம்பி ஒன்னுக்குள்ள ஒன்னா ஆயிட்டோம் அதான். முத்தரசனுக்கோ ஒன்றும் புரியவில்லை நீங்கள் என்ன கூறுகிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறினான். புரியும்படி கூறுகிறேன் கேள். உன் சித்தப்பா நிலம் என் பெயரில் தான் உள்ளது. அதை தான் நான் இப்படி கூறினேன். அது மட்டுமல்லாமல், இந்த பணமும் அந்த இடத்திற்கு தான் ஒரு கோடி வைத்துக் கொள் ஏனென்றால் எனக்கு அடித்து பிடுங்கினேன் என்ற பெயர் வந்து விடக்கூடாது அல்லவா என்பதால் மட்டுமே.
அதனால் இப்பணத்தை உன் செலவிற்கு வைத்துக் கொள் என்று கூறிவிட்டு கிளம்புகிறார் பண்ணைக்காரர். முத்தரசன் ஆச்சிரியத்தில் இருந்தான் அதனால் அவன் பண்ணைக்காரர்க்கு எந்த பதிலும் கூறவில்லை.
முத்தரசன் இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென்று இப்படி இவர் நமக்கு ஒரு கோடி தர காரணம் என்ன அதற்கு இவர் முன்பே தலையை தந்து இருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே இருந்தான் நான் படிக்கும் பொழுது கொடுத்திருந்தலாவது எனக்கு பயன்பட்டிருக்கும். நான் இவ்வளவு துன்பம் அடைந்திருக்க மாட்டேன் அல்லவா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தான். பின் பெரிய பெட்டியில் இருந்த பணத்தை பார்த்து கொண்டு தனக்குள்ளே பல கேள்விகளை கேட்டுக் கொண்டான்.
அந்த நாள் முழுவதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். பின் இரவு நேரத்தில் படுக்கை அறைக்கு செல்லும்போது, சரி! நாமும் இப்பொழுது எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறோம் நமக்கென்று பல செலவுகளும் இருக்கிறது அதற்காகவாவது இப்பொழுது பணத்தை வைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டான். என்னதான் அவன் தன் மனதிற்கு ஆறுதல் சொன்னாலும் சிறிய கலக்கத்துடன் தான் இருந்தான். அடுத்த நாள் விடிந்தது அந்த காலைப்பொழுது அவனுக்கு எப்பொழுதும் இருப்பது போல் அல்லாமல் சற்று வேறு விதமாக இருப்பது போல் உணர்ந்தான். மறுபடியும் நேற்று நடந்தவற்றை பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தான். இது கனவா நமக்கு ஏன் இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது பணம் தர வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அதைப் பற்றி சிந்தனைக்கு சென்றான் முத்தரசன். இதைப்பற்றி பண்ணைக்காரரிடமே சென்று கேட்டு விடலாமா இல்லை வேண்டாமா என்று நினைத்துக் கொண்டு இருந்தான் சுமார் 3 மணி நேரம் சிந்தித்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தான் சரி இதை அவரிடமே சென்று கேட்டிடலாம் என்று நினைத்தான். உடனே அவரை சந்திக்க புறப்பட்டான் அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான் அப்பொழுது பக்கத்து வீட்டு ராஜா, தம்பி எங்கப்பா என்று கேட்டார் போகும் பொழுது எங்க போற என்று கேட்க மாட்டார்கள் என்பதால் அவர் நாசுக்காக எங்கப்பா என்று இவனை பார்த்து கேட்டார். அதற்கு முத்தரசனும் இங்கே பக்கத்தில் தான் ஐயா என்று கூறிவிட்டு வேகமாக சென்றான். செல்லும் வெளியில் அவன் ஏதோ படப்பட என இருப்பது போல் உணர்ந்தான். பண்ணைக்காரன் வீட்டின் வெளியே சென்று நின்றான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் செல்லமுத்து என்பவர், “என்ன தம்பி வேண்டும் ஏன் இங்க வந்து நிற்கிற ஏதோ யோசித்துக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்குது”. கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் உடல் அசைவுகளை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்று கூறியவிடுவர். அது போல் சுலபமாக செல்லமுத்து முத்தரசன்-ஐ பார்த்து கண்டுபிடித்துவிட்டார். முத்தரசன் தயங்கி..... தயங்கி..... நா..... பண்ணைக்காரரை பார்க்கணும் என்று செல்லமுத்துவிடும் கூறினான். செல்லமுத்து என்னப்பா விஷயம் என்னன்னு சொல்லுப்பா என்றார். அதற்கு முத்தரசனும் இல்லங்க நான் பண்ணைக்கார பார்த்து சொல்லிக்கிறேன் என்றான்.
சரி! கொஞ்ச நேரம் இங்கே நில்லுப்பா நான் போய் ஐயாவை பார்த்து சொல்லிட்டு வரேன்னு சொல்விட்டு சென்றார். செல்லமுத்து முத்தரசன் சரிங்கய்யா என்று கூறிவிட்டு சற்று பதற்றத்துடன் நின்றான். செல்லமுத்து பண்ணைக்காரரிடம் சென்று கூற பண்ணைக்காரர் சற்று யோசித்து….. வா..... வா.... செல்லலாம் என்று செல்லமுத்துடன் வந்தார் பண்ணைக்காரர். அவன் ஏன் வந்திருப்பான் ஒருவேளை, பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ? இல்லை சண்டை ஏதும் போடுவானோ? என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தார் முத்தரசன் பண்ணைகாரரை பார்த்து வணக்கம் ஐயா என்று கூற பண்ணைக்காரர் என்னப்பா திடுதிப்புன்னு வந்து நிக்கிற ஏதாவது பிரச்சனையா இல்ல வேற எதுவும் வேணுமா இல்ல இன்னும் கொஞ்சம் பணம் ஏதும் எதிர்பாக்குறியா சொல்லுப்பா பாத்து பன்னிக்கலாம் என்றார். ஆனால் சற்று பதற்றத்துடன் முத்தரசனும் சொல்ல வந்ததை கூற முடியாமல் நின்றான். எதுவா இருந்தாலும் பரவாயில்லை என்றார் பண்ணைக்காரர். ஒன்னும் இல்லங்க ஐயா திடீர்னு நீங்க வந்து பணம் கொடுத்தீங்க நான் எப்படி ஐயா அதை வச்சிக்கிறது அதான் நான் முன்னாடியே சொன்னேனே அந்த இடத்துக்கு என்று, நீ என்ன மறந்துட்டியா? இல்லையா எனக்கு நீங்க திடீர்னு தந்தீங்கள்ல இவ்வளவு நாள் இல்லாம அதான் நான் கொஞ்சம் பதட்டம் ஆயிட்டேன். பரவாயில்லப்பா வச்சுக்க உனக்கு ஏதாவது வேணும்னாலும் சொல்லு பார்த்து பண்ணிக்கலாம் என்று கூறினார். பண்ணைக்காரன் இல்லைங்க ஐயா பரவாயில்ல இதுவே போதும் இப்படி கூறிவிட்டு நான் போயிட்டு வரேன் ஐயா என்று சொல்லி புறப்பட்டான். பின் வீட்டை வந்து அடைந்தான் அந்த நாள் இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை ஒரு பக்கம் வீட்டில் ஒரு கோடி, பின் அதை திடீரென்று கொண்டு வந்து கொடுத்த பண்ணைக்காரர் இந்த இரண்டையும் நினைத்து இவனுக்கு உறக்கமே வரவில்லை.இதைதான் “பணம் வந்தால், தூக்கம் வராது என்பார்கள் பெரியோர்”.
அடுத்த நாள் சூரியன் உதித்தது, எழுந்தவுடன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று நினைத்தான். அங்கே சென்றாலாவது சற்று நிம்மதி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டான். அதன்படியே கோவிலுக்கு செல்ல புறப்பட்டான், வீட்டின் வெளியே வந்த நடக்க ஆரம்பித்தான். கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பண்ணைக்காரர் வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும். அவன் இப்பொழுது பண்ணைக்காரர் வீட்டை அடைந்து சிறிது தூரம் சென்றான். அங்கே பண்ணைக்காரர் வீட்டில் வேலை பார்ப்பவர்களில் ஒருவர், மற்றொருவரிடம் அந்த முத்தரசன் கொடுத்து வச்சவன் அவனுக்கு ஒரு ஜாக்பாட் அடிச்சிருக்கு டா..... என்று பேசியது இவனின் காதில் விழுந்தது. நடந்து கொண்டு இருந்த முத்தரசன் நின்றான். அவர்கள் பேசுவதை ஒரு மரத்தின் ஓரம் நின்று கவனிக்க தொடங்கினான். என்னப்பா சொல்லுற என்று மற்றவன் கேட்டான். உனக்கு விஷயமே தெரியாதா? பண்ணைகாரர் அவனுக்கு செய்யறது எல்லாம் உனக்கு தெரியாதா?. முத்தரசனுக்கு ஒன்றும்புரியவில்லை அவர் எனக்கு என்ன அப்படி செஞ்சுட்டாரு? என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டான். பேசிக் கொண்டிருப்பதில் ஒருவன், அவனை
படிக்க வைக்கிறது என்ன....... பணம் கொடுக்கிறது என்ன..... ராஜாகிட்ட சொல்லி தினமும் சாப்பாடு கொடுக்கிறது என்ன....... என்று இவன் சொன்னதை முத்தரசன் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். இதைக்கேட்ட முத்தரசன் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. மனம் கலக்கமடைந்தது, வாய் அவனை அறியாமலே தடுமாறியது.
என்னப்பா சொல்ற இது எல்லாமே அவரு(பண்ணைக்காரர்) முத்தரசனுக்கு செய்றாரு. ஆமா.... இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு தான் தெரியும்.ஏன் முத்தரசனுக்கே தெரியாது-னா பாத்துக்கவே. இப்போ நா ஒங்கிட்ட சொல்லிட்டே அதுல நீயும் ஒரு ஆளு என்று பேசிக்கொண்டு இருப்பவரில் ஒருவன் மற்றவனிடம் கூறினான்.
பின் முத்தரசனோ, இதை கேட்டு மனம் கலக்கமடைந்து கோவிலுக்கு செல்லாமல் பண்ணைக்காரன் வீட்டுக்குள் சென்றான். அங்க இருந்து செல்லமுத்துவிடம் நா உடனே பண்ணைக்காரர பார்க்கணும்..... ஆமா பார்க்கணும்..... என்ற உரக்க கூறினான். செல்லமுத்து பண்ணைக்காரரை அழைத்து வந்தார். இந்த முறை செல்லமுத்து பண்ணைக்காரரிடம் செல்லும் பொழுது, ஐயா மறுபடியும் முத்தரசன் தங்களை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறார் எனக்கு ஏதோ சந்தேகமாக உள்ளது ஐயா என்று கூறி விடுகிறார். பண்ணைக்காரரை பார்த்த முத்தரசன், கடும் கோபத்தோடு பார்த்தான். பண்ணைக்காரர் இவனை கண்டதும், எதோ இவனுக்கு தெரிந்திருக்கிறது போல அதான் இப்படி வந்திருக்கான் என்று மனதில் நினைத்துக் கொண்டார். பண்ணைக்காரர் முத்தரசனை பார்த்து முத்தரசா வா........ வா........ முத்தரசா....... என்ன என்னாச்சு....... இப்படி கோபப்படுற அளவுக்கு என்னப்பா நடந்தது என்று பண்ணைக்காரர் முத்தரசனை பார்த்து கேட்டார்.
எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கிறது ஐயா....... என்ன........ என்னமோ எல்லாம் பேசுறாங்க........... அதா உங்ககிட்டயே வந்து கேட்கலாம்னு வந்தே. சரி! என்னப்பா என்ன? அப்படி என்ன பேசினாங்க? நீ என்ன கேட்ட....
அதாவது நீங்கதான் படிக்க வைத்ததாகவும், அப்புறம் நீங்க தா ராஜா கிட்ட சொல்லி ராஜா ஐயா தினமும் எனக்கு சாப்பாடு தருவதாகவும், நீங்க தா பணம் தருவதாகவும்........ இப்ப கூட நீங்கதானே நிலத்துக்கு பணம் தந்திங்க..... நானே எதுவும் கேட்காம..... ஏன் நீங்க எனக்கு இதெல்லாம் செய்யறீங்க...... உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மதம் சொல்லுங்க ஐயா எனக்கு இப்பவே தெரியனும் ஐயா என்று சற்று தயக்கத்துடன் கேட்டான்.
பண்ணைக்காரரோ அதெல்லாம் ஒன்றும் இல்லப்பா இந்த ஊர்ல மக்கள் நிறைய பேசுவாங்க...... நா எதுக்கு உனக்கு இதையெல்லாம் செய்யணும். நான் இதுக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டே(நிலம்) நான் அடிச்சு புடுங்குறேன்னு பேசக்கூடாது அதனால்தான் நான் உனக்கு பணம் கொடுத்தேன்.
நீங்க சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா தயவு செய்து உண்மையை கூறுங்களேன் என்று கதறி அழுது கேட்டான். பண்ணிக்காரர் ஏது உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா! இங்க இருந்து கிளம்பு..... என்று கூறி பண்ணைக்காரன் புறப்பட்டார். பண்ணைக்காரர் இவனுக்கு இது எல்லாம் எப்படி தெரிஞ்சது......... யார் சொல்லி இருப்பா....... என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டார்.
உண்மையில் என்ன நடந்தது என்றால் பண்ணைக்காரன் வீட்டில் ஒருவன் பேசுவது மிகவும் உண்மைதான். பண்ணைக்காரர் என்னதான் செய்கிறான் என்று பார்ப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
பண்ணைக்காரன் இப்படி சொல்வதைக் கேட்ட முத்தரசனுக்கோ அவர் ஏதோ செய்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அன்று நாள் முழுவதும் இதைப் பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தான். பின் கோவிலுக்கு சென்று அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தான். அந்த நேரத்தில் ஒரு முதியவர் ஒருவர், கையில் ஒரு பெரிய துணி பையையும், கிழிந்த உடைகளையும் அணிந்திருந்தார். அவர் இவன் அருகில் வந்து தம்பி உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பம் சரியானது நீ நினைப்பது அனைத்தும் உண்மைதான் என்று கூற, முத்தரசனுக்கு ஒரே அதிர்ச்சி இவருக்கு எப்படி என் மனதில் நினைப்பது தெரியும்....... இவர் என்ன சொல்கிறார்..... என்று வியப்புடன் பார்த்தான். ஐயா நீங்கள் எப்படி என் மனதில் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்? என்று முதியோரை முத்தரசன் கேட்டான். எனக்கு அனைத்தும் தெரியும் பண்ணைக்காரன் செய்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள் என்று முதியவர் சொன்னார். இவ்வாறு இவர் கூறியதை கேட்ட முத்தரசனுக்கு கோபம் ஏற்பட்டது.
அந்த முதியவர் இப்படி கூறிவிட்டு கிளம்பிவிட்டார். பின் இவன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தான். இங்கு என்னதான் நடக்குது? எனக்கு ஒரே குழப்பமா இருக்குதே? என்று மனதில் நினைத்துக் கொண்டான். ஏனென்றால் பண்ணைக்காரரும் கேட்ட கேள்வி அனைத்துக்கும் பதில் கூறாமல் அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல், முதியவரோ இவ்வாறு கூறுகிறார். ஒருவேளை பண்ணைக்காரர் ஏதும் ஒரு ஆள் போட்டிருப்பாரோ இவ்வாறு என் இடம் கூற. பின் பண்ணைக்காரன் வீட்டிற்கு சென்றான் அங்கு அவர் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று ஐயா என்று கூப்பிட்டான் முத்தரசன் கூப்பிட்ட சொல்லுக்கு பண்ணைக்காரர் இவனை பார்த்து வா முத்தரசா என்று அன்புடன் கூறினார். ஐயா எனக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை தயவு செய்து உண்மையை கூறுங்கள் ஐயா என்று அழுது கொண்டே கதறி அழுது கொண்டே அவரிடம் கேட்டான். இவனை பார்ப்பதற்கு மிகவும் பாவமாக இருக்கிறது எத்தனை நாள் மறைப்பது? அதாவது ஒரு நாள் அவனுக்கு உண்மை தெரியவரும் அது இப்போது தெரிந்தால் என்ன சரி அவரிடம் கூறி விடுவோம் என்று பண்ணைக்காரன் நினைத்தார் சரிப்பா உனக்கு உண்மை தானே தெரியணும் என்று பண்ணைக்கார்ர் கேட்க.... ஆம் ஐயா தயவு செய்து கூறுங்கள் என்று அழுதுகொண்டே கேட்டான்.
சரி! உண்மையை கூறுகிறேன் கேள். உனக்கு ஐந்து வயது இருக்கும் உனது அம்மா, அப்பா இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக எனது மகிழுந்தில் அவர்கள் சைக்கிள் மோதி அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அப்பொழுது, உனது அம்மா இறந்துவிட்டார். உனது அப்பாவின் மூச்சு மட்டும் இருந்தது. நான் அவரை பார்க்கும் பொழுது சற்று மயக்கத்தில் இருந்தார். அவரை நான் தண்ணீர் தெளித்து எழுப்பினேன். அவர் கண் விழித்தார். அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைத்து, அவரை தூக்கினேன். ஆனால் அவரோ அது எல்லாம் வேண்டாம். எனது உயிர் இன்னும் ஐந்து நிமிடங்களில் பிரிந்து விடும் ஐயா என்றார். எனக்கு நீங்கள் உதவி செய்வதாக நினைத்தால் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவனை படிக்க வையுங்கள் அதுமட்டுமல்லாமல், அவனுக்கு ஒரு துணையாக இருங்கள் ஐயா என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். உனது அப்பாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக இதை அனைத்தையும் செய்தேன். அப்பொழுதுதான் என்னால் இறந்த இரண்டு ஆன்மாக்களும் நிம்மதி அடையும் என்று கூறினார்.
பண்ணைக்காரன் இதை எல்லாம் கேட்ட முத்தரசன் மனம் மிகவும் வருத்தம் அடைந்து கண்களில் நீர் பெருக்கெடுத்தது அவன் என்ன செய்வது என்று அறியாமல் நின்றான். அது மட்டுமல்ல யாரோ ஊரில் பேசிக் கொண்டார்கள் என்று சொன்னியே அதை எல்லாம் உண்மைதான் ராஜாவை உணவு கொடுக்க சொன்னதும் நான்தான். ஒரு ஆசிரியர்-ஐ வைத்து பள்ளியில் சேர்க்க வைத்ததும் நான் தான். கல்லூரிக்கு பணம் கொடுத்ததும் நான் தான் என்று அவனிடம் சொன்னார். இது எல்லாம் கேட்ட முத்தரசன் ஒரு மனநிலைக்கு வந்தான். உண்மையை உணர்ந்து அவரை கையெடுத்து கும்பிட்டு அவரது காலில் விழுந்தான். எனது அப்பாவின் வார்த்தைக்காக இப்படி செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா என்று கூறி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டான். வீட்டிற்குள் நுழைந்தான், அவர் நினைத்து இருந்தால் எனக்கு செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட செயலை செய்யவும் ஒரு மனது வேண்டும் கொடுத்த வாக்கிற்காக அவர் இதை எல்லாம் செய்து இருக்கிறார். இவன் அப்பா மற்றும் அம்மாவின் உருவப்படத்திற்கு அருகில் சென்று நீங்கள் எனக்கு மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், உங்கள் கடமையும் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று கூறி கதறி அழுதான். சிறிது நேரம் கழித்து, பண்ணைக்காரர் அவன் வீட்டிற்கு வந்தார் முத்தரசன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாருங்கள் ஐயா.... என்று நாற்காலி எடுத்து போட்டான். அவர் நாற்காலியில் அமர்ந்து நான் உனது ஐந்து ஏக்கர் நிலத்தையும் திருப்பித் தருகிறேன் என்று கூறி அதற்கான பத்திரங்களையும் எடுத்து அவனிடம் நீட்டினார். பின் தயங்கினான் முத்தரசன் நீ ஒன்றும் நினைக்க வேண்டாம். உனது சித்தப்பாவின் இடத்தை வேறு யாரோ அவரிடத்தில் இருந்தனர். அது எனக்கு 14 நாட்கள் முன்பு தான் தெரியவந்தது பின் நான் அதை எனது பெயருக்கு மாற்றிவிட்டேன். இப்பொழுது நான் உனக்கு எழுதி தருகிறேன் என்று கூறினார். பண்ணைக்காரன் நீ இதை வாங்கிக்கொள் எனக்காகவாவது இதை வாங்கிக்கொள் என்று கூறினார். அவர் சொல்லை தட்டாமல் இதை வாங்கிக் கொண்டான் முத்தரசன். அதுமட்டுமல்லாமல் வேறு ஒரு உதவியும் அவனுக்கு தெரியாமல் செய்திருந்தார். அது என்னவென்றால் ஒரு தோப்பு ஒன்றையும் அவன் பெயரில் பத்திரம் செய்து கொடுத்தார். பின் முத்தரசன் அவரிடத்தில், நான் ஏதும் உங்களிடம் கடுமையாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா இன்று கைகூப்பி நின்றான் முத்தரசன். முடிந்தது.... முடிந்ததாகவே இருக்கட்டும் நான் சென்று வருகிறேன் என்று கூறி புறப்பட்டார் பண்ணைக்காரர். அவர் தனக்கு இவ்வளவு உதவிகளை செய்ததை நினைத்து இனி நானும் நன்றாக உழைப்பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டான். பின் அடுத்த நாளே வயலுக்கு சென்று வயல்களில் வேலை செய்ய ஆரம்பித்தான். வயல்களில் நன்கு வேலை பார்த்தான் அவன் ஒரு நல்ல நிலைமைக்கு திரும்பினான். அது மட்டுமல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகளை தன் சொந்த செலவில் நன்றாக படிக்க வைக்கும் அளவிற்கு வளர்ந்தான். இப்படியாக அவன் ஊரில் இருக்கும் மக்களுக்கும் பல உதவிகளை செய்து வந்தான்.
நாம் இக்கதையின் வாயிலாக அறிவது, கொடுத்த வாக்கு என்பது மிகவும் முக்கியம். அது மட்டுமல்லாமல் உதவி செய்யும் மனதையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“செய்த உதவியும் இட்டு வைத்த விதையும் வீணா போகாது
- முதுமொழி
“தர்மம் தலைகாக்கும்”
- பழமொழி.
ம.மாதவன்
இரண்டாமாண்டு இளநிலை கணினி அறிவியல்
நேரு நினைவு கல்லூரி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment