மகளிர் உரிமைத் தொகை: யார் பெற முடியாது? விண்ணப்பிப்பது எப்படி?
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது. பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இன்றி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று கூறினார். மகளிருக்கு மகுடம் சூட்டும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் " கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சித்தலைவர்களான உங்களின் பங்கு முக்கியமானது. ஒரு திட்டத்தை தொடங்குவது பெரிய விசயமில்லை அதை திறமையாக செயல்படுத்த வேண்டும். ஆவணங்களுக்காக காத்திருக்காமல், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த திட்டம் அண்ணாவின் பிறந்ததினமான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதகாலமே உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment