Sunday, February 23, 2025

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?



ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, முதல் இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கோள்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். பிப்ரவரி 28 ஆம் தேதி, முதல் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் இரவு வானில் அணிவகுக்கப்படுவதால் ஒரு அரிய வான நிகழ்வு நடைபெறும். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சி அல்ல. இது சூரிய மண்டலத்தில் நமக்கான இடம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. 


நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும்.


வானில் சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களும் சூரியனை மையமாக வைத்து நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்த கோள்கள் சூரியணை சுற்றும்போது, நாம் பார்க்கும்போது, ஒரே திசையில் காட்சியளிக்கும். அந்த வகையில், சூரிய குடும்பத்தில் உள்ள, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், உள்ளிட்ட 7 கிரகங்களின் அணிவகுப்பு வரும் பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

பல கிரகங்கள் ஒரே நேரத்தில், சூரியனின், ஒரே பக்கத்தில் வரும்போது கோள்கள் அணிவகுப்பு என்பது நடக்கிறது. இந்த கோள்களின் அணிவகுப்பு பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கினாலும் மார்ச் 3-ந் தேதி தான் இந்தியாவில் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறந்த பார்வை குறிப்புகள்

இந்த கிரக சீரமைப்பின் சிறந்த காட்சியைப் பெற, உங்கள் கண்கள் இருட்டுடன் சரிசெய்ய 20-30 நிமிடங்கள் அனுமதிக்கவும்சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் செயற்கை ஒளியிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்திலிருந்து செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி,  நெப்டியூன், புதன், மற்றும் சனி  ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஒரு பரிதியில் தோன்றும்இவற்றில் 5 கோள்களை சாதாரண கண்களால் காண முடியும் என்றாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிற்கு அதிக ஆற்றல் கொண்ட தொலைநோக்கிகள் அல்லது இருகண் நோக்கி தேவைப்படுகிறது. 


கிரகங்கள் அணிவகுப்பு தொடர்பான இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்காக, தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் குழுமம், தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இருந்து இந்த கோள்கள் அணிவகுப்புநிகழ்வை பார்க்கலாம் என கூறியுள்ள அறிவியலர்கள், 2025-ல் பார்க்கவில்லை என்றால், அடுத்து 2040ல் தான் 7 கோள் அணிவகுப்பு பார்க்க முடியும் என கூறியுள்ளனர். 

கோள்களின் இணைவு நமது சூரிய மண்டலத்திற்குள் மட்டும் பயன்படுவதில்லை. பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய கோள்களின் இணைவை வானியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் புறக்கோள்களை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.


இந்த நிகழ்வை மறுபடியும் காண 15 ஆண்டுகள் ஆகும் என்பதால், அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஏழு கிரக அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Friday, February 21, 2025

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.



புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில்
 பயிலும்  161 மாணவர்கள், இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வின் எதிர்காலம் -START பற்றிய  ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள். இந்த பயிற்சி மேற்கொண்ட மாணவர்களை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி,  ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டினர். இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டி ஒருங்கிணைத்தார்.

இந்திய விண்வெளி அறிவியல் ஆய்வு: கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்: பாரதிய அந்தரிஷ் நிலையம் (BAS),  சந்திர ஆய்வு அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்புகள், நுண் ஈர்ப்பு விசை மற்றும் வாழ்க்கை அமைப்புகளின் உயிரியல்: மனித விண்வெளி ஆய்வுக்கான சவால்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், சந்திர மேற்பரப்பில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு அறிவியல் வாய்ப்புகள், சூரியன்-பூமி இணைப்பைப் பற்றிய சிறந்த புரிதலை நோக்கி: அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கான வழிகள், விண்வெளி சார்ந்த வானியல் மற்றும் வானியற்பியலில் எதிர்கால திசைகள், சூரிய குடும்ப ஆய்வுக்கான எதிர்காலத்தை கற்பனை செய்தல், சூரிய இயற்பியல் மற்றும் விண்வெளி வானிலைக்கான இந்தியாவின் முயற்சி, விண்வெளி சார்ந்த அண்டவியல்: எதிர்கால ஆய்வுக்கான சிந்தனைகள், வானியற்பியல் ஆராய்ச்சியில் எதிர்கால திசைகள், வெளிக்கோள்களைத் தேடி, இந்தியாவில் தரைவழி ஆய்வகங்கள், விண்வெளி அடிப்படையிலான ஆய்வில் சாதகமான புள்ளிகளாக லாக்ரேஞ்ச் புள்ளிகள்: எதிர்கால வாய்ப்புகள், சூரிய செயல்பாட்டைப் புரிந்துகொள்வது மற்றும் கணிப்பது: சூரியனின் துருவங்கள், எதிர்கால விண்வெளி ஆய்வுக்காக ஏவுதள வாகனங்களை அனுப்புதல், எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான மேம்பட்ட உந்துவிசை அமைப்பு, விண்வெளியில் நறுக்குதல்: தொழில்நுட்பங்கள், சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், எதிர்கால கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான தொடர்பு மற்றும் வழிசெலுத்தல், சூரிய குடும்ப ஆய்வுக்கான அறிவியல் பேலோடுகள் மற்றும் நுட்பங்கள், சந்திரனில் கட்டிட கட்டமைப்புகள்: சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், எதிர்கால விண்வெளி அறிவியல் ஆய்வுக்கான செயல்படுத்தும் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள், கோள் மாதிரிகளின் காப்பகம் மற்றும் பகுப்பாய்வில் உள்ள சவால்கள், அறிவியல் ஆய்வில் கோள் பாதுகாப்பு: எதிர்காலத்திற்கு புதிய விதிகள் போன்ற தலைப்புகளில் இந்த இணைய வகுப்பு நடைபெற்றது.



இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்! 😍🔥👌 https://angusam.com/receive-isro-certificates-161-students/


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Sunday, February 16, 2025

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்.

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான  கருத்தரங்கம்.


கல்லூரி மாணவர்களை வானவியலில் ஈடுபடுத்த புதிய முயற்சி.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரு இந்திய வான் இயற்பியல் நிறுவனம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், ராமன் ரிசர்ச் பவுண்டேசன், ஆகியவை சார்பில் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் சென்னை தரமணி கணித அறிவியல் நிறுவனத்தில் நடந்தது.


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி பொதுமக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதுவரை 100 இடங்களில் நட்சத்திர திருவிழா, 200 இடங்களில் நிலா திருவிழா, 1000 இடங்களில் அஸ்டானாமி, 2024 இடங்களில் கோள்கள் திருவிழா, 200 இடங்களில் ஸ்கோப் பெஸ்டிவல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி முடித்துள்ளது. 2025ல் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு மூலம் கல்லூரி மாணவர்களிடமும், 1000 இடங்களில் அஸ்ட்ரானமி லேப் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது இடங்களிலும் , 5000 இடங்களில் அஸ்ட்ரானமி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை செயல் விளக்கத்துடன் பரப்புரை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கு நடந்தது.


கணித அறிவியல் நிறுவனத்தில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சிக்கு டாஸ் மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். டாஸ் மாநில பொதுச் செயலாளர் மனோகர் நோக்கவுரையாற்றினார். சென்னை அஸ்ட்ரோ கிளப் பொதுச் செயலாளர் உதயன் அனைவரையும் வரவேற்றார்.


சென்னை கணித அறிவியல் நிறுவன இயக்குனர் ரவிந்திரன் கலந்து கொண்டு 1000 இடங்களில் அஸ்ட்ரோ லேப்பிற்கான உபகரணங்கள், 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்விற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கலந்து கொண்டு விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டிற்கான இணைய தளத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் விஞ்ஞானிகள் கோவிந்தராஜன் இளங்கோ டாஸ் ஆலோசகர்கள் ஜோசப் பிரபாகர், ஜோஸ்பின் பிரபா உள்பட பலர் வானவியல் குறித்து பேசினர்.


2ம் நாள் நிகழ்வு சேலம் ஜெயமுருகனின் வானவியல் பாடலுடன் தொடங்கியது.இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் பொது மக்கள் தொடர்பு செயல்பாட்டு இயக்குநர் நிருஜி மோகன் ராமனுஜம் குறுகிய நீண்ட கால அறிவியல் செயல்திட்டங்கள் குறித்தும், முகிலன் மக்களும் விஞ்ஞானிகளாகலாம் எனும் தலைப்பிலும் பேசினர்கள்.


மோஹலி இந்திய அறிவியல் நிறுவன மூத்த விஞ்ஞானி த.வெங்கடேஸ்வரன், வானவியல் குறித்த செயல்விளக்க முறைகளை இணைய தள மூலமாக பேசினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஞ்ஞான் பிராச்சாரின் முன்னாள் இயக்குனர் நகுல் பிரசார் சான்றிதழ்களை வழங்கி விழா நிறைவுரையாற்றினார்.

முடிவில் டாஸ் செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயற்பியல் துறை பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், டாஸ் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

சந்திர கிரகணம் 2025: மார்ச் 14 அன்று அரிய 'இரத்த நிலவு'.

சந்திர கிரகணம் 2025: மார்ச் 14 அன்று அரிய 'இரத்த நிலவு'. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து , சந்திரனின் மேற்பரப்ப...