தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.
கரூர் தோகைமலை சர்வீட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
சூரிய வடிகட்டி மூலம் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களதுகட்டுரைகள்(அறிவியல்,பொருளாதாரம்,இலக்கியம்),கவிதைகள்,சிறுகதைஎன அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
த. பாதர்பேட்டையில் அறிவியல் கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு.
உப்பிலிபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமையாசிரியர் பொறுப்பில் இருக்கும் அறிவியல் ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். முதல் நிகழ்வாக அறிவியல் அறிஞர் சர்.சி. வி.ராமன் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தினர்.
செயற்கைக்கோள், காற்றழுத்தம்,அடர்த்தி, குறுக்கலைகள், நெட்டலைகள், துரித உணவு குடிநீர் சுத்திகரிப்பு,ரெயின் டிடெக்டர், வளர்பிறை தேய்பிறை, வகுப்பறையில் வானவில், இன்னும் பல செயல்பாடுகளை மாணவர்கள் தங்களது சொந்த படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள்.
நெகிழியை ஒழிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தித்தாளில் 110 பைகள் செய்து மாணவர்கள் அசத்தினர். அவர்களை பை வடிவத்தில் அமரச் வைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.தளுகை பாதர்பேட்டை கிராமத்திற்கு நெகிழியை ஒழிப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது. உடன் ஆ.சுப்பிரமணியன், ஆனந்தம், க. பா.சுப்ரமணியன், தனலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களதுகட்டுரைகள்(அறிவியல்,பொருளாதாரம்,இலக்கியம்),கவிதைகள்,சிறுகதைஎன அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
Blood Moon Lunar Eclipse March 3 2026 இரத்த நிலவு சந்திர கிரகணம் மார்ச் 3 2026.
2026-ன் முதல் முழு சந்திர கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கலாம்; எப்போது தெரியுமா?
இரவு வானின் கருமை நிறத்தில், பூமியின் நிழல் நிலவை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் காட்சியை விட ஒரு சிறந்த அனுபவம் இருக்க முடியாது. அந்த அற்புதக் காட்சியை வழங்க வருகிறது மார்ச் 3-ஆம் தேதி நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியாக நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் ராட்சத நிழல் நிலவின் மீது படர்வதை நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இது அறிவியல் பூர்வமாகப் பகுதி கிரகணம், முழு கிரகணம் எனப் பிரிக்கப்பட்டாலும், மார்ச் 3 அன்று நாம் காணப்போவது ஒரு 'முழுமையான' காட்சி.
சந்திர கிரகணத்தின் உச்சகட்டமே 'முழு சந்திர கிரகணம்' தான். நிலவு முழுமையாக பூமியின் அடர் நிழல் பகுதிக்குள் (Umbra) நுழையும்போது இது நிகழ்கிறது. மார்ச் 3 அன்று, இந்தியாவில் சந்திரன் உதயமாகும் போதே பூமியின் நிழலால் மறைக்கப்பட்ட நிலையில் தான் தோன்றும்.
இந்த நேரத்தில் நிலவு முற்றிலும் மறைந்து போய் இருட்டாகத் தெரியாது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். மாறாக, அது ஒரு வசீகரமான செப்பு நிறத்திலோ அல்லது அடர் சிவப்பு நிறத்திலோ ஜொலிக்கும். இதனாலேயே வானியலாளர்கள் இதனை 'பிளட் மூன்' (Blood Moon) அல்லது 'இரத்த நிலவு' என்றழைக்கிறார்கள்.
சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை பூமியின் வளிமண்டலம் சிதறடித்துவிட்டு (Rayleigh scattering), நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் நிலவின் பக்கம் வளைத்து அனுப்புகிறது. அந்தச் சமயம் பூமியின் காற்றில் இருக்கும் தூசு மற்றும் மேகங்களைப் பொறுத்து நிலவின் சிவப்பு நிறம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும். பூமி நிலவை விட அளவில் பெரியது என்பதால், இந்த முழு கிரகண நிகழ்வு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்.
பகுதி கிரகணத்திற்கும் முழு கிரகணத்திற்கும் என்ன வித்தியாசம்? வானில் நடக்கும் இந்த விளையாட்டை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை துல்லியமாக நேர்க்கோட்டில் அமையாதபோது இது நடக்கும். நிலவின் ஒரு பகுதியை மட்டும் யாரோ கடித்தது போலக் கருப்பாகத் தெரியும். இதில் 'சிவப்பு நிறம்' தோன்றாது. முழு சந்திர கிரகணம்- நிலவின் 100% பரப்பும் பூமியின் நிழலுக்குள் வந்துவிடும். அப்போதுதான் அந்த மாயாஜாலச் சிவப்பு நிறம் தோன்றும்.
பாதுகாப்பாகப் பார்க்கலாமா? நிச்சயமாக, சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை நாம் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கண்களால் தாராளமாகப் பார்க்கலாம். மார்ச் 3 அன்று இரவு வானைப் பார்க்கத் தயாராகுங்கள். பூமியின் நிழல் நிலவை எப்படிச் சிவப்பாக மாற்றுகிறது என்பதை ரசிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு.
A total lunar eclipse will occur when the whole Moon comes under the umbral shadow of the Earth and the partial lunar eclipse occurs only when a part of the Moon comes under shadow of the Earth.
When: Tuesday, March 3, 2026
Magnitude: 1.155 (A deep, total eclipse)
Where: Visible across India, Eastern Asia, Australia, and the Americas.
Timings & Visibility in India
Most of the places of India will observe the ending of the lunar eclipse at the time of moonrise except some places of North-East India and Andaman and Nicobar Islands where the end of the totality phase of the eclipse will also be visible.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களதுகட்டுரைகள்(அறிவியல்,பொருளாதாரம்,இலக்கியம்),கவிதைகள்,சிறுகதைஎன அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.