Sunday, March 29, 2026

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை.

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை.


முசிறி முழு நேர கிளை நூலகம், முசிறி வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை 29.03.26 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தேவையான மென் திறன்கள் குறித்து இந்திய அளவில் புகழ்பெற்ற தலைமை பண்பு பயிற்சியாளர் திருமிகு ஆர்த்தி அவர்கள் சிறப்பாக எடுத்து வழங்கினார். இதில் மாணவர்கள் எவ்வாறு தன்னை உணருதல், பிறரிடம் உரையாடுதல், உறவாடுதல், ஆளுமை திறன்கள், தலைமைப்பண்பு, கூட்டு முயற்சி, கவன உழைப்பு, சூழ்நிலையை கையாளுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கினார். வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவரே திறமைசாலியாக மாறுகிறார் என்றும், நமக்கு தேவை இருந்தால் நான் தான் தேடிப் போக வேண்டும் என்றும், எல்லோரும் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவி புரிவார்கள் என்றும் விளக்கமாக எடுத்துக் கூறினார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். தேடல் இருந்து கொண்டே இருந்தால்தான் புதிதாக நாம் கற்றுக் கொண்டு இருக்க முடியும். இதுவே மாணவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கூறிய அறிவுரையாகும்.

தகவல்: முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை.

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை. முசிறி முழு நேர கிளை நூலகம், முசிறி வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கி...