Friday, March 19, 2021

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காகஇயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987). 

லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார்ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம்டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார்மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914ல் முதல் உலகப் போர் வெடித்தவுடன்வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார். 

இயற்பியல்வேதியியல் ஆகிய துறைகளில்அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும்துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இதுஅலைதுகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன. 

physicsandwaves / Interface Waves

இருமைத் தன்மை என்னும் எண்ணக்கருஒளிபொருள் என்பன தொடர்பாக 1600களில்கிறிஸ்டியன் ஹூய்கென்ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன்லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும்அலைதுகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றிஅணுக்கள்மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது. 


லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல்அனைத்து பருப்பொருள்களும்அலை-போன்ற தன்மை கொண்டுள்ளனஒரு குறிபிட்ட "m" திணிவு கொண்ட துகள்ஒரு குறிப்பிட்ட திசை வேகம் "v" இல் சென்றால், "λ" என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். λ=h/p; p – உந்தம், h - பிளாங்க்கு மாறிலி). 

Electron Configuration | Physics topics, Electron configuration, Science  chemistry

பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்ததுடே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல்  தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...