Saturday, February 28, 2026

த. பாதர்பேட்டையில் அறிவியல் கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு.

த. பாதர்பேட்டையில் அறிவியல் கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு. 

உப்பிலிபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமையாசிரியர் பொறுப்பில் இருக்கும் அறிவியல் ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். முதல் நிகழ்வாக அறிவியல் அறிஞர் சர்.சி. வி.ராமன் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தினர்.








செயற்கைக்கோள், காற்றழுத்தம்,அடர்த்தி, குறுக்கலைகள், நெட்டலைகள், துரித உணவு குடிநீர் சுத்திகரிப்பு,ரெயின் டிடெக்டர், வளர்பிறை தேய்பிறை, வகுப்பறையில் வானவில், இன்னும் பல செயல்பாடுகளை மாணவர்கள் தங்களது சொந்த படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். 


நெகிழியை ஒழிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  செய்தித்தாளில் 110 பைகள் செய்து மாணவர்கள் அசத்தினர். அவர்களை பை வடிவத்தில் அமரச் வைத்தது மிகவும்  சிறப்பாக இருந்தது.தளுகை பாதர்பேட்டை கிராமத்திற்கு நெகிழியை ஒழிப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது. உடன் ஆ.சுப்பிரமணியன், ஆனந்தம், க. பா.சுப்ரமணியன், தனலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.














No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...