Friday, January 30, 2026

துறையூர் விவேகானந்தா வித்யா சதன் விடுதி-விண்வெளி நிகழ்ச்சி.

துறையூர் விவேகானந்தா வித்யா சதன் விடுதி-விண்வெளி நிகழ்ச்சி.


துறையூர் அருகே விவேகானந்தா வித்யா சதன் விடுதி இரவு விண்வெளி வான்நோக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. 




 
இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார். தொலைநோக்கி வழியாக தொலைவில் உள்ள பொருளை துல்லியமாக கண்டு களித்து மகிழ்ந்தார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர்,  முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி  பற்றி எடுத்துக் கூறினார்.




இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அழகிய நிலா, வியாழன் கோள், சனிக்கோள் மற்றும் சூரிய கரும்புள்ளி ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், மாநில செயலாளர் TASS முனைவர் ரமேஷ், துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன்,  போன்றோர் பங்குபெற்று சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நிலவை கண்டு ரசித்தார்கள். பின்னர் தொலைநோக்கி மூலம் வானில் உள்ள பொருட்களை நேரடியாகக் கண்டு ஆர்வத்துடன் ரசித்தனர்.

No comments:

Post a Comment

துறையூர் விவேகானந்தா வித்யா சதன் விடுதி-விண்வெளி நிகழ்ச்சி.

துறையூர் விவேகானந்தா வித்யா சதன் விடுதி-விண்வெளி நிகழ்ச்சி. துறையூர் அருகே விவேகானந்தா வித்யா சதன்  விடுதி  இரவு  விண்வெளி  வான்நோக்கல் நிகழ...