Monday, March 23, 2026

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா.

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா.

துறையூர், மார்ச் 23. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் மூக்கப்பிள்ளை கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரிக்குழு செயவர் பொன்.ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லூரிக்குழுத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் தமிழ்மணி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பட்டம் பெற்ற மாணவர்களை உறுதிமொழி ஏற்க செய்து பட்டமளிப்பு விழாவை நிறைவு செய்தார்.



சிறப்பு விருந்தினராக சென்னை, ரானே குழும நிறுவனங்களின் தலைவர் ஹரீஷ்லட்சுமணன் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட் டியலில் தமிழில் முதலிடம் பெற்ற தமிழ்த்துறை மாணவி பவித்ரா உள்ளிட்ட தரவரிசை பெற்ற 23 மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம், முதுகலை மற்றும் இளங்கலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த 852 பேருக்கு பட்டம் வழங்கி பேசினார். கிராமப்புற மக்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற உயர்த்த நோக்கத்தில் கல்லூரி நிறுவனர் மூக்கப்பிள்ளை இந்த கல்லூரியை நிறுவியுள்ளார். இன்று இந்தக் கல்லூரியில் பயில்கிற மாணவர்களில் 95 விழுக்காடு பேர் கிராமப்புறத்தை சேர்த்தவர்கள் என்பது பெருமைக்குரியதாகும் என்று கூறினார். ரானே குழும நிறுவனத்தை சேர்த்த ஐயப்பன் சிவபாலாஜி கல்லூரிக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், மாலாபாலசுப்பிரமணியன், சியாமளா ரவிச்சந்திரன், தனிபு கிஷன், முனைவர் சோம. ராசேந்திரன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மீனாட்சிசுந்தரம், தேர்வு தெழியாளர் முனைவர்.மேரி அன்புமதி, கல்வி புலத்தலைவர் முனைவர்.சாவித்திரி, உள்தர கட்டுப்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சரவணன், வேலைவாய்ப்பு மைய பொருப்பாளர் முனைவர் கஸ்தூரி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியால்லாப்பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...