Saturday, September 26, 2026

துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் நிலவு நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் நிலவு நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டு அழகிய நிலவு மற்றும் வெள்ளிக்கோள் கண்டு மகிழ்ந்தார்கள்.  புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் கல்லூரி பேராசிரியர் TASS மாநில செயலாளர் முனைவர்  ரமேஷ் அவர்கள் வான்நோக்கல் செயல்பாடுகள் பற்றி மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார். நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவர்களுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

மாணவர்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் நிலவு நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் நிலவு நோக்கல் நிகழ்ச்சி. துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக துறையூர் அபாகஸ் பயிற்சி மையத்தில் வான்நோக்கல் நிகழ...