சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயற்பியல் சங்கம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் கழகம் மற்றும் காக்னிசன்ஸ் (Cognizance) கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் மற்றும் இரவு வான் பார்வை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயலாளரும், நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் P. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு "Journey Through Space" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தனது உரையில் சூரியக் குடும்பம், கோள்கள் மற்றும் அவற்றின் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிமையாகவும் அறிவியல் ஆதாரங்களுடனும் விளக்கினார்.
கருத்தரங்கத்தைத் தொடர்ந்து மாணவிகள் நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவிகளுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு வான் பார்வை நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலம் அழகிய நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய வான்பொருட்கள் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொலைநோக்கியின் வழியாக வானியல் பொருட்களைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மாணவிகளிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு மறக்க முடியாத அறிவியல் அனுபவமாக அமைந்தது.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


.jpeg)
.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment